டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த இன்னிங்சில், 6 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 30 ரன்கள் எடுத்தார்.
184 இன்னிங்சில் கோலி 6 ஆயிரம் ரன்கள் கடந்த நிலையில், தற்போது ராகுல் 179 இன்னிங்சிலேயே 6 ஆயிரம் ரன்களை கடந்து கோலியின் சாதனையை முறிடியத்துள்ளார்.
இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தனது அடுத்த ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது.