இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜோ ரூட் இன்று அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-1 என்ற கணக்கில் இழந்தது.
ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது.
கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.