games

img

ஐபிஎல் 2021 : இன்று பெங்களூரு - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை  

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. 

அமீரகத்தின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்குச் செல்ல இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருவதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நேற்றைய போட்டியில் சென்னையுடன் தோல்வியடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னையுடன் பலப்பரீட்சை நடத்தும். 

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

;