games

img

ஐபிஎல் 2021 : சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று மோதல் 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 2 வெள்ளி, 8 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. இந்த 

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று பிளே - ஆப் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெறச் சென்னை அணி முனைப்புக் காட்டி வரும் நிலையில், நடப்பு சீசனில் முந்தைய போட்டியில் சென்னை அணியிடம் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுக்க ஐதராபாத் அணியும் தீவிரம் காட்டி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. 

;