games

img

ஐபிஎல் 2021 : சென்னை - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டாப் 2 இடங்களைப் பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல், டி20 கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள இவ்விரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், முதல் இடத்தை தக்க வைப்பதில் சென்னை அணியும், முதல் இடத்தை தட்டிப் பறிப்பதில் டெல்லி அணியும் தீவிரம் கட்டி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. 

;