games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

நெதர்லாந்து அணியை எளிதாக வீழ்த்திய இந்தியா

“சூப்பர் 12” சுற்றின் 11-வது ஆட்டத்தில் பலமான இந்திய அணியை கத்துக்குட்டி நெதர்லாந்து அணி எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி கோலி(62), ரோஹித் (53), சூர்யா குமார் (51) ஆகியோரின் அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, இந்திய அணியின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. வேகப்பந்துவீச்சில் தொடர்ந்து வேகம் காட்டிய இந்திய அணியின் தாக்கு தலை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப் பிற்கு 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந் தது நெதர்லாந்து. இதன்மூலம் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  (ஸ்கோர் : இந்தியா 179/2 (20), நெதர்லாந்து 123/9 (20))

மழை  வருமா?

வெள்ளியன்று நிலவரப்படி  இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் மெல்போர்ன் நகரில் 50% மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உயிர் தப்பிய நெதர்லாந்து வீரர்

நெதர்லாந்து பேட்டிங் செய்த பொழுது 14 ஓவரை இந்திய வீரர் அர்ஷதீப் சிங் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை அர்ஷதீப் சிங் பவுன்சராக வீச பந்தை எதிர்கொண்ட நெதர்லாந்து வீரர் ஸ்காட்டின் தலையின் கீழ் பகுதியை நோக்கி பதம் பார்த்தது. ஸ்காட் ஹெல்மெட் கீழ்புறம் சிறப்பு உபகரணம் அணிந்திருந்த தால் உயிர் பிழைத்தார். இல்லையென்றால் மிகவும் மோசமான காயத்துடன் உயிருக்கு போராட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஸ்காட் ஹெல்மெட் கீழே அணிந்திருந்த சிறப்பு உபகரணத்தை பவுன்சர் பந்து சுக்குநூறாக நொறுக்கியது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மருத்துவ ஆலோசனை கேள்விக்குப் பின்னர் மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தார் விக்கெட் கீப்பராக ஸ்காட் எட்வர்ட்ஸ்.

அதே பவுன்சர்... அதே மைதானம்... அமைதியான ரசிகர்கள்...

2014-ஆம் ஆண்டு ஷீல்ட் உள்ளூர் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தேசிய வீரர் பிலிப் ஹியுக்ஸ் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். நியூ சவுத் வேல்ஸ் அணி வீரர் சீன் அப்போட் வீசிய பவுன்சர் வகை பந்துவீச்சு பிலிப் ஹியுக்ஸ் தலையின் கீழ் பகுதியில் கடுமையாக தாக்கியது. முகுளத்தின் முக்கிய பாகங்கள் சிதைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிலிப் ஹியுக்ஸை தாக்கிய அதே வகை பந்துவீச்சுதான் ஸ்காட்டை தாக்கியது. சிறப்பு உபகரணம் இருந்ததால் உயிர் பிழைத்துள்ளார் ஸ்காட். பிலிப் ஹியுக்ஸ் இறந்த மைதானம் சிட்னி. இதே போல ஸ்காட்டை தாக்கிய பவுன்சரும் சிட்னியில் தான் எழும்பியது. இரண்டு தாக்குதலும் ஒரே மைதானத்தில் (சிட்னி), ஒரே மாதிரியாக நிகழ்ந்ததால் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் மிரண்டு எழுந்து அமைதியாக என்னவென்று பார்த்தனர். கலகலப்பாக இருந்த சிட்னி திடீரென தேர்வு அறை போன்று அமைதியாக மாறியது.

தென்  ஆப்பிரிக்கா அபாரம்

“சூப்பர் 12” சுற்றின் 10-வது ஆட்டத்தில் வங்கதேச அணியை தென் ஆப்பிரிக்கா எதிர்கொண்டது.  டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, பேட்டிங் தேர்வு செய்து மிடில் ஆர்டர் வீரர் ரோஸ்ஸோவின்  (109) மிரட்டலான சதத்தின் உதவியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 103 ரன்கள் அபார வெற்றி பெற்று அசத்தியது. (ஸ்கோர் தென் ஆப்பிரிக்கா 205/5 (20), வங்கதேசம் 101/10 (16.3))

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து
நேரம் : காலை 9:30 மணி

இன்றைய ஆட்டம்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா 
நேரம் : மதியம் 1:30 மணி

இரண்டு ஆட்டங்களும் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.