games

img

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ரோகித் சர்மா 5 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக ரோகித் சர்மா 5 ஆம் இடம் பிடித்துள்ளார். 2019 அக்டோபரில் 54-வது இடத்திலிருந்த ரோகித் சர்மா, தற்போது 5வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6வது இடத்தில் உள்ளார். 

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் ஜோ ரூட்டும் அடுத்த மூன்று இடங்களில் கேன் வில்லியம்சன், ஸ்மித், மார்னஸ் ஆகியோரும் உள்ளனர். ரோகித் சர்மா இதுவரை 42 டெஸ்டுகளில் விளையாடி 2,909 ரன்கள் எடுத்துள்ளார். 7 சதங்களும் 14 அரை சதங்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;