games

img

ஜசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர்  

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஒரே ஒரு பிரிவில் மட்டும் டாப்-10ல் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும்தான் இடம்பெற்றுள்ளனர்.  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது.  இதில் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என அனைத்து தரவரிசை பட்டியலிலும் சேர்த்தே ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.  

பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மட்டும் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் இடம்பெற்றுள்ளார்.  

ஐசிசி டி20 பவுலிங் தரவரிசையில், முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சி இடம் பெற்றுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ஆதில் ரஷீத், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்ப்பா, ரஷீத் கான், வனிந்து ஹசரங்கா, ஆன்ரிச் நார்ட்யே, முஜிபுர் ரஹ்மான், நசூம் அகமட், ஷாஹின் அஃப்ரீடி இடம் பெற்றிருக்கின்றனர்.  

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம், முகமது ரிஸ்வான், டேவிட் மலான், டெவன் கான்வே, ஏரோன் பிஞ்ச், ரசி வான் டெர் டசன், மார்டின் கப்தில், பதும் நிசாங்கா, இந்தியாவின் கேஎல் ராகுல் இடம் பெற்றிருக்கின்றனர்.  

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மது நபி முதல் இடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் சகீப் அல் அசன், மொயீன் அலி, ஜேஜே ஸ்மித், லியம் லிவிங்ஸ்டனே ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.