games

img

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி  

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  

12ஆவது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்ற 2ஆவது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனையான டேனி வியாட் சதமடித்தார். இவர் 125 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்தார். சோபியா 60 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.  

294 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38 ஓவரில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  

இதனால் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.      

நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

;