யாருக்கு வெற்றி வாய்ப்பு?
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் வென்று பட்டத்தை கைப்பற்றுவார் என மிக எளிதாக கூறிவிடலாம். காரணம் கிர்ஜியோஸை விட ஜோகோவிச் பலம் வாய்ந்த வீரர். அனுபவம், பார்ம், அதிரடி, போராட்ட குணம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துபவர். இதனால் ஜோகோவிச் கோப்பை வெல்ல 80% வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. முதன்முறை யாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டி க்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோஸ் அதிரடிக்கு பெயர் பெற்ற திறமையாளர் தான் என்றாலும், ஜோகோவிச்சை எதிர்த்து அவருக்கு இணையான போட்டியாளராக விளையாடும் அளவிற்கு கிர்ஜியோஸிற்கு போதிய அனுபவம் கிடையாது. தனது குழந்தை தன செயல்களை விட்டுவிட்டு முழுப்பலத்தையும், இடைவிடா அதிரடியை வெளிப்படுத்தினால் ஜோகோவிச்சை வீழ்த்தி முதன்முறையாக மகுடத்தை சூடலாம்.
கிர்ஜியோஸுக்கு ஒன் ஜாய்ஸ்
அரையிறுதியில் பிரிட்டன் வீரர் நோரியிடம் கடுமையாக போராடி தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார் ஜோகோவிச். ஆனால் கிர்ஜியோஸ் நடால் காயம் காரணமாக விலகியதால் அதிர்ஷ்ட வாய்ப்பில் நுழைந்தவர். இதனால் கடந்த 2 நாட்களாக கூடுதல் பயிற்சி யுடன் களமிறங்குகிறார் கிர்ஜியோஸ். ஆனால் ஜோகோவிச் அரையிறு தியில் போராட்ட வெற்றியுடன் சற்று களைப்புடன் தான் 24 மணிநேரத் தில் இறுதி போட்டியில் களமிறங்குகிறார். ஜோகோவிச்சின் களைப்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிரடியாக விளையாடினால் கிர்ஜியோஸ் சாம்பியன் பட்டம் வெல்ல சாய்ஸ் உள்ளது.
பரிசுத்தொகை
- பட்டம் வெல்பவருக்கு - ரூ.19 கோடி (தோராயமாக)
- 2-ஆம் இடம் பிடிப்பவருக்கு - ரூ.10 கோடி (தோராயமாக)
- அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட் சுற்று ஆட்டங்களில் வெளியேறியவர்களுக்கும் பரிசுத்தொகை உள்ளது.