games

img

தமிழ்நாடு ரசிகர்களால் உலகம் முழுவதும் பேமஸ் ஆன கிரிக்கெட்டின் “சுட்டிக்குழந்தை”

8-வது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் இங்கிலாந்து அணி  சாம்பியன் பட்டம் வென்றாலும், கிரிக்கெட் உலகில் இங்கிலாந்தை விட டிரெண்டிங்கில் இருப்பது ஒரே ஒரு  24 வயது “சுட்டிக்குழந்தை” தான். அந்த மீசை முளைத்த சுட்டிக்குழந்தை டிரெண்ட் ஆக காரணம் உலகக் கோப்பை இறுதிபோட்டியில் ஆட்ட நாயகன் விருதையும், உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றது தான்.  இங்கிலாந்து கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த  சுட்டிக்குழந்தையின் பெயர் சாம் கர்ரன். 24 வயது ஆனாலும் பார்க்க மிகவும் இளமையாக கிட்டத்தட்ட 13 வயது  இளைஞர் போல இருப்பார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளை யாடிய பொழுது சாம்மின் சேட்டை, குழந்தை தனத்தை கண்டு தமிழ்நாடு ரசிகர்கள் சாம் கர்ரனுக்கு “குழந்தை சாமி”, “சுட்டிக்குழந்தை” என 2 பெயர்களை வைத்து சமூக வலைத் தளங்களில் டிரெண்ட் செய்தனர்.  எதார்த்தமாக கூறப்பட்ட 2 வார்த்தை கள் தற்போது கிரிக்கெட் உலகமே சாம் கர்ரனை “சுட்டிக்குழந்தை” என போற்றி வருகிறது. சாம் கர்ரன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ்நாடு ரசிகர் களால் கூறப்பட்ட இரண்டு வார்த்தை கள்தான் அவரின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. முக்கியமாக கிரிக்கெட் உலகில் மிகவும் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஐபிஎல் தொடரில் 2020, 2021 சீசனில் 2 ஆண்டு கள் சென்னை அணிக்காக விளை யாடிய சாம் கர்ரன் 2022 சீசனில் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஏலத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.