games

img

விளையாட்டு...

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜியோ சினிமாவை கைகழுவிய ரசிகர்கள்

அம்பானி அதிர்ச்சி

16-வது சீசன் ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஸ்டார்  நிறுவனமும், ஒடிடி பிரிவில் பிரதமர்  மோடியின் நெருங்கிய நண்பரான அம் பானியின் ஜியோ சினிமாவும் இலவச மாக ஒளிபரப்பின. உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு, மொழி பிரச்ச னை, அடிக்கடி தடை, விளம்பரத்திற்கு முன்னுரிமை, பெண் ரசிகர்களை காட்சிப் படுத்துதல் என பல்வேறு சர்ச்சைகளு டன் ஜியோ சினிமா 16-வது சீசனை நிறைவு செய்துள்ளது. ஆனால் இல வசம் என்ற ஒரே ஒரு காரணத்திற் காகவே ஜியோ சினிமா பெரும்பாலா னோரின் மொபைல் போனில் கடந்த ஒன்றரை மாத காலமாக இருந்த நிலை யில், ஐபிஎல் முடிந்தவுடன் ஜியோ சினிமாவை ஸ்மார்ட்போன் பயனர்கள்  நீக்கம் செய்துவிட்டனர். இதை நெட்டி சன்கள் வெளிப்படையாக அறிவித்து, ஸ்க்ரீன்சாட் (SCREEN SHOT) செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வெளியேறுவதன் காரணம்?

பொதுவாக இந்தியாவில் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் ஹாட் ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ5, வூட்  ஆகிய ஒடிடி பிளாட்பாரங்கள் புதிய படங்கள், ஹிட் படங்கள், வெப் சீரி யஸ், விளையாட்டு நேரடி நிகழ்வுகள் என அடிப்படை கட்டமைப்பு வசதி களை கொண்டிருக்கும். அடிப்படை  கட்டமைப்பு வசதிகள் பிரம்மாண்ட மாக இருப்பதால் சந்தா தொகை கட்டி யாவது ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள ஒடிடி-யில் இணைகின்றனர். ஆனால் ஜியோ சினிமா சந்தா தொகை எதுவும் இல்லை, இலவசம் என்றாலும் மற்ற ஒடிடி பிளாட் பாரங்கள் போல் எதுவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஸ்மார்ட்போன் பயனர்கள் கண்டு கொள்வதில்லை. இதன் காரண மாகவே தனது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற பிரம்மாண்ட செலவு செய்து இலவசமாக அடிக்கடி எதையாவது ஒளி பரப்பு செய்கிறது. இதன் பிரதிபலிப்பு தான் பிபா உலகக்கோப்பை, நடப்பா ண்டு ஐபிஎல் சீசன் ஆகும். பிபா உல கக்கோப்பை முடிந்தவுடன் கால்பந்து ரசிகர்கள் எப்படி அன்இன்ஸ்டால் (uninstall) செய்தார்களோ, அதே போல ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் அன்இன்ஸ்டால் செய்து விட்டார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

பிரசாத இலை தான் ஜியோ சினிமா..

ஜியோ சினிமா ஒடிடி துறையில் இருப்பது கால்பந்து, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும். அதுவும் பிபா, ஐபிஎல் போன்ற தொடர்களின் இலவச தொடர்களால்தான் மற்ற யாருக்கும் தெரியாது. புரியும்படி சொன்னால் திருவிழா காலங்களில் இலவசமாக வழங்கப்படும் பிரசாதம் போல, இலவச ஒளிபரப்பை ஜியோ சினிமா வழங்குகிறது. பிரசாதம் சாப்பிட்டு தீர்ந்த பின் எப்படி இலையை தூர வீசுகிறார்களோ அதே போலதான் ஜியோ சினிமாவின் நிலைமை உள்ளது. இப்படி இருப்பதால் டிஆர்பி எகிறுவதை பற்றி அது யோசிக்கவே முடியாது.

சென்னை அணியால் 3.2 கோடி பேர் பார்வையாளர்கள்
சாதனையாக சமாளிக்கும் ஜியோ சினிமா

சென்னை - குஜராத் அணியின் இறுதி ஆட்டத்தை ஜியோ சினிமா செயலியில் சுமார் 3.2 கோடி பேர்  பார்த்துள்ளனர் இதன் மூலம் நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ள தாக ஜியோ சினிமா பெருமையுடன் சமாளித்து வருகிறது. ஆனால் இலவசம் மூலமே இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளது. சந்தா மூலம் ஹாட் ஸ்டார் பல போட்டிகளில் கோடிக்கணக்கான  பார்வையாளர்களை பெற்றது.

திருத்தம் 

நேற்றைய தீக்கதிர் (31.5.2023) 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள விளையாட்டுச் செய்தியில் முதல் வரியில் “தமிழ்நாடு மாநில மற்றும் தமிழின அணியாக” என்ற வார்த்தைகள் பொருத்தமற்ற முறையில் அமைந்துள்ளன. தவறுக்கு வருந்துகிறோம்.            - ஆசிரியர்


 

 

;