ஐபிஎல் தொடரில் வரலாற் றில் மோசமான சாதனையை படைத்துள்ளார் பெங்களூரு வீரர் ஹாசில்வுட். வெள்ளியன்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத் தில் பஞ்சாப் அணிக்கெதிராக 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக் கொடுத்து பிளே ஆப் கனவில் இருந்த பெங்களூரு அணியின் தலையில் பவுன்சர் தாக்குதல் நடத்தியுள்ளார் ஹாசில்வுட். இது மட்டுமல்லாமல் சிராஜ் (4 ஓவர்கள் 34) மற்றும் ஹாசில்வுட் (ஆஸ்தி ரேலியா) இருவரும் இணைந்து பஞ்சாப் அணிக்கு 100 ரன்கள் வாரி வழங்கியுள்ளனர். 2018-ஆம் ஆண்டு ஹைதராபாத் வீரர் பசில் தம்பி பெங்களூரு அணிக்கெதிராக 4 ஓவர்களில் 70 ரன்கள் வழங்கி யதே ஐபிஎல் தொடரில் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையாகும். 60-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 209 ரன்கள் குவித்து 54 ரன் கள் வித்தியாசத்தில் பெங்களூ ருவை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.