games

img

கத்தாரில் அர்ஜெண்டினா...

22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், உலகக்கோப்பையில் பங்கேற்கும்  அணிகள் ஒவ்வொன்றாக கத்தாருக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கால்பந்து உலகின் நட்சத்திர அணியான அர்ஜெண்டினா புதனன்று இரவு கத்தாரை வந்தடைந்தது. மொராக்கோ, துனிஷியா, ஈரான்,  தென்கொரியா, சுவிட்சர்லாந்து அணிகள் நாடுகள் ஏற்கெனவே கத்தாருக்கு  வந்துவிட்ட நிலையில், செனகல், பிரான்ஸ், வேல்ஸ், சவூதி அரேபியா, ஜெர்மனி, கனடா, போலந்து, மெக்ஸிகோ ஆகிய அணிகள் வியாழனன்று மதியத்திற்குள் கத்தார் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.