காலிறுதி ஆட்டங்கள் தொடக்கம்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. வெள்ளியன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகளும், 2-வது ஆட்டத்தில் ஜப்பான் - ஸ்வீடன் அணிகள் மோதுகின்றன.
ஸ்பெயின் - நெதர்லாந்து
வெற்றி வாய்ப்பு
நேரம் : காலை 6:30 மணி
இடம் : வெல்லிங்டன் மைதானம், நியூசிலாந்து
இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என திடமாக ஆருடம் கூட சொல்ல முடியாது. காரணம் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. ஆட்டத்திறனில் ஸ்பெயின் அணியை கணிக்க முடியாது என்பதால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற சகல வாய்ப்புகள் உள்ளது. அதே போல கால்பந்து உலகின் அனுபவத்தில் ஸ்பெயின் அணியை காட்டிலும் நெதர்லாந்து அணி சீனியர் என்பதால், நெதர்லாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதனால் ஆட்டத்தின் போக்கை பொறுத்தே யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என காண முடியும்.
ஜப்பான் - ஸ்வீடன்
வெற்றி வாய்ப்பு
நேரம் : மதியம் 1:00 மணி
இடம் : ஆக்லாந்து மைதானம், நியூசிலாந்து
ஜப்பான் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் சுறுசுறுப்பாக விளையாடக் கூடிய அணியாகும். ஸ்வீடன் அணி தந்திரமாக விளையாடக் கூடியது. ஜப்பான் அணி ஒருமுறை சாம்பியன் பட்டம் (2011 - ஜெர்மனி) வென்றுள்ளது. ஸ்வீடன் அணி சாம்பியன் பட்டம் மட்டும்தான் வெல்லவில்லை. ஆனால் அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் சிறப்பாக விளையாடி யுள்ளது. ஒருமுறை இறுதி வரை போராடி கோப்பையை (2003 - அமெரிக்கா) இழந்துள்ளது. 3 முறை (1991, 2011, 2019) 3-வது இடத்துடன் விடைபெற்ற அனுபவம் கொண்டது. இப்படி இரண்டு அணிகளுக்கும் சரிசம ஒற்றுமை உள்ள நிலையில், நடப்பு சீசன் உலகக்கோப்பையில் இரு அணிகளும் பலமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. இதனால் எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என கணிக்க இயலாது.
ஆசியக் கோப்பை ஹாக்கி - தமிழ்நாடு 2023
ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் 7-வது சீசன் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்று வருகிறது. புதனன்று லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. சீனா, பாகிஸ்தான் அணிகள் வெளியேறியது. இந்நிலையில், வியாழனன்று அரை யிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென் கொரியா - மலேசியா அணி களும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்தியா, ஜப்பானை எதிர்கொள்கிறது. அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன் 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் சீனா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
5-வது இடத்திற்கான ஆட்டம்
சீனா - பாகிஸ்தான்
நேரம் : மாலை 3:30 மணி
இடம் : மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், சென்னை
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 (ஹெச்டி டிவி)
முதல் அரையிறுதி
தென் கொரியா - மலேசியா
நேரம் : 6:00 மணி
2-வது அரையிறுதி
இந்தியா - ஜப்பான்
நேரம் : 8:30 மணி
திருப்பூரில் சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு
ஆசியக் கோப்பை தொடரை காண தமிழ்நாடு அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பெரிய டிஜிட்டல் திரை மூலம் ஹாக்கி தொடரை பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஹாக்கிக்கு குறைந்த அளவு ஆர்வம் இருந்தாலும், ஆசியக் கோப்பை தொடரின் நேரடி ஒளிபரப்பை காண திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கூட்டம் அலைமோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என திடமாக ஆருடம் கூட சொல்ல முடியாது. காரணம் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. ஆட்டத்திறனில் ஸ்பெயின் அணியை கணிக்க முடியாது என்பதால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற சகல வாய்ப்புகள் உள்ளது. அதே போல கால்பந்து உலகின் அனுபவத்தில் ஸ்பெயின் அணியை காட்டிலும் நெதர்லாந்து அணி சீனியர் என்பதால், நெதர்லாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதனால் ஆட்டத்தின் போக்கை பொறுத்தே யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என காண முடியும்.