நாளை காலிறுதி சுற்று ஆட்டங்கள் தொடக்கம்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாக் அவுட் சுற்று ஆட்டங்களின் களைப்பை போக்க புதன், வியாழனன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளியன்று (ஆக., 11) காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.
தென் அமெரிக்காவில் ஒரு அணி மட்டுமே
கால்பந்து என்றால் தென் அமெரிக்கா பெயர் இல்லாமல் இல்லை. காரணம் ஆடவர் கால்பந்து உலகில் அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே போன்ற சாம்பியன் அணிகளும், பெரு, பராகுவே, சிலி, கொலம்பியா, ஈகு வடார், வெனிசுலா ஆகிய நட்சத்திர அணி களும் இருப்பதால் உல கக்கோப்பை தொடரின் ஒவ்வொரு பிரிவு ஆட்டத்திலும் தென் அமெரிக்கா நாடுகள் கண்டிப்பாக இருக்கும். ஆடவர் பிரிவை எடுத்துக்கொண்டால் காலிறுதியில் குறைந்தபட்சம் 4 அணிகள் இருக்கும். ஆனால் நடப்பு சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தென் அமெரிக்கா சார்பில் கொலம்பியா மட்டுமே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதிகம் எதிர்பார்த்த பிரேசில், அர்ஜெண்டினா ஆகியவை லீக் சுற்றில் வெளியேறின.
ஐரோப்பா ஆதிக்கம்
உலகக்கோப்பையில் ஆடவர் பிரிவைப் போலவே மகளிர் பிரிவிலும் ஐரோப்பிய கண்டம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகளில் 5 அணிகள் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தது ஆகும். ஆசியா, தென் அமெரிக்கா, ஓசியானா சார்பாக தலா ஒரு அணி காலிறுதிக்கு முன்னேறியது. ஆப்பிரிக்காவில் எந்த நாடும் இல்லை.
காலிறுதி அணிகளும் கண்டங்களும்
ஐரோப்பா : ஸ்வீடன், ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து
ஆசியா : ஜப்பான்
ஓசியானியா : ஆஸ்திரேலியா
தென் அமெரிக்கா : கொலம்பியா
முன்னணி நட்சத்திரங்கள் அடுத்தடுத்து வெளியேற்றம்
கனடா ஓபன் டென்னிஸ்
டென்னிஸ் உலகின் முன்னணி சர்வதேச தொடர்களில் ஒன்றான கனடா ஓபன் டென்னிஸ், கனடாவின் முக்கிய நகரான மான்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இருபாலர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் அதிர்ச்சி தோல்வியுடன் அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர்.
வெளியேறிய நட்சத்திரங்கள்
ஆடவர் ஒற்றையர் பிரிவு
(2-வது சுற்று ஆட்டம்)
1. பெலிக்ஸ் (கனடா)
2. எவன்ஸ் (பிரிட்டன்)
3. நோரி (பிரிட்டன்)
4. கோரிச் (குரோஷியா)
மகளிர் ஒற்றையர் பிரிவு
(2-வது சுற்று ஆட்டம்)
1. கார்சியா (பிரான்ஸ்)
2. பியான்கா (கனடா)
மேற்குறிப்பிட்ட வீரர், வீராங்கனைகள் தரவரிசையிலும் அனுபவத்திலும் முன்னணியில் இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் இளம் வீரர் - வீராங்கனைகளிடம் வீழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பார்மில் வொஸ்னியாக்கி
டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனையும், கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான டென்மார்க்கின் கரோலினா வொஸ்னியாக்கி நீண்ட காலத்திற்கு பிறகு கனடா ஓபன் தொடரில் விளையாட வந்துள்ளார். இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரிட்டனின் கிம்பர்லியை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்த வொஸ்னியாக்கி, 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கடந்த காலங்களை போல நடப்பு சீசனில் சற்று அதிரடியாக விளையாடி வருவதால் வொஸ்னியாக்கி மீண்டும் பார்மில் வந்துள்ளார் என்பது போல தெரிகிறது. வொஸ்னியாக்கி டென்னிஸ் துறையில் மட்டுமல்லாமல் உலகளவிலான மாடலிங் துறையிலும் முன்னணி நட்சத்திரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.