டிக்கெட் விலை எப்படி?
22-வது சீசன் உலகக்கோப்பை தொடர் அரபு நாடான கத்தாரில் வரும் 21-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் கத்தார் நாட்டிற்கு சென்று நேரடியாக போட்டியை காண விசா மற்றும் டிக்கெட் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஏற்கெனவே பல கட்ட மாக டிக்கெட் விற்பனை நடைபெற்ற நிலையில், இதுதான் கடைசி கட்ட விற்பனையாகும். நவ., 10-ஆம் தேதிக்கு மேல் இனி கனவில் கூட டிக்கெட் பற்றி நினைக்க முடியாது. காரணம் டிக்கெட் முன்பதிவு செய் யும் பிபா இணையத்தளம் முடங்கும் அளவிற்கு டிக்கெட் விற் பனை ஜோராக உள்ளது. தற்போ தைய டிக்கெட் விற்பனையை உற்று நோக்கினால் இன்னும் 3 நாட்களில் அனைத்து வித ஆட்டங்களின் டிக் கெட்டுகளும் தீர்ந்துவிட வாய்ப்புள்ளது. டிக்கெட் விலை (இந்திய மதிப்பில்) லீக் சுற்று: ரூ.5,600 - ரூ.17,900 16-வது சுற்று: ரூ.7,800- ரூ.20,400 காலிறுதி: ரூ.16,700 - ரூ.34,700 அரையிறுதி: ரூ. 29,204 - ரூ.81,395 இறுதிப் போட்டி: ரூ.49,400 - ரூ.81,968 (மேலே குறிப்பிட்ட டிக்கெட்டின் விலை ஒரு ஆட்டத்திற்கு உரியது) முக்கிய குறிப்புகள்: 1. பிபாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின்படி (https://www.fifa. com/) முன்னுரிமை என்ற அடிப்ப டையில் முதலில் வருவோருக்கு சிறப்பு விலையில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. 2. மேலே கொடுக்கப்பட்ட டிக் கெட்டுகள் விலை அனைத்தும் தோராயமாக தான் அறிவிக்கப் பட்டுள்ளது. 3. கூட்டத்திற்கு ஏற்ப மற்றும் சீட்டின் இடத்திற்கு ஏற்ப டிக்கெட்டு களின் விலை தாறுமாறாக மாறு படும். 4. ஹய்யா கார்டு உள்ளவர்கள் டிக் கெட்டுகளை எளிதில் பெறலாம்.