games

img

‘முழு’ பந்தை உருட்டிய ‘கால்’ பந்துகள்!

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் சிறிய அணிகள் (இரண்டாம் தர அணிகள்) முதல்தர மற்றும் சாம்பியன் அணிகளுக்கு சில அதிர்ச்சி தோல்விகளை அளிக்கும்.  ஒன்றிரெண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு செல்லும். சிறிய அணிகள் காலிறுதிக்குச் சென்ற வரலாறுகளும் உண்டு. ஆனால் நடப்பு சீசன் உலகக்கோப்பையில் எல்லாம் வித்தியாசமாக நடைபெற்று வருகிறது. பல முதல் தர அணிகள் சிறிய அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது. சில அணிகள் கடுமையாக போராடி வெற்றி பெற்றுள்ளது. பெரிய அணிகளிடம் கூட வியூகம் அமைக்கலாம். ஆனால் சிறிய அணிகளிடம்  எப்படி வியூகம் அமைப்பது? நாக் அவுட்  சுற்றுக்கு எப்படி முன்னேறுவது? என பல்வேறு இடியாப்ப சிக்கலில் விழித்து வருகிறது பல சீனியர் அணிகள்.

நடப்பு சீசன் அதிர்ச்சிகள்

  1.     சவூதி அரேபியா - அர்ஜெண்டினா வை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
  2.  வேல்ஸ் - பலமான அமெரிக்கவை டிரா செய்தது
  3.  மொரோக்கோ - குரோஷியா அணியை டிரா செய்தது மட்டுமல்லாமல், பெல்ஜி யம் அணியை பந்தாடியது
  4.  ஜப்பான் - 4 முறை சாம்பியனான ஜெர்மனியை புரட்டியெடுத்தது
  5.  தென் கொரியா - பலம் வாய்ந்த அணி யான உருகுவேயை டிரா செய்தது
  6.  ஆஸ்திரேலியா - கால்பந்து உலகில் புகழ்மிக்க அணியான துனிசியாவிற்கு அதிர்ச்சி அளித்தது  லீக் சுற்று ஆட்டங்களிலேயே சிறிய அணிகள் தங்களது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் தர  அணிகளை மிரட்டி வருவது விளை யாட்டு உலகில் கால்பந்து விளை யாட்டின் அந்தஸ்து மேலும் உயர்ந்து வருகிறது.

 

;