ரொனால்டோ மீதான விதிமீறல், சுய நலம், செயல்பாட்டின் வெறுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆட்டத்தின் 20-வது நிமிடத்திலேயே போர்ச்சுக்கல் அணி மிக மோசமாக திணறியது. மாற்று கேப்டன் பெபே சரிவர ஆலோசனை வழங்கவில்லை. அவர் வெறுமென மைதானத்தில் சுழன்றார். போர்ச்சுக்கல் அணி திணறுவது நன்கு தெரிந்தும் முதல் பாதியில் ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்து அழகு பார்த்தது மிகவும் தவறான செயல். இரண்டாம் பாதியில் ரொனால்டோ வருகைக்கு பிறகு போர்ச்சுக்கல் வீரர்கள் உற்சாகத்துடன் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் போதியளவு நேரமின்மையால் தோல்வியை தழுவியது போர்ச்சுக்கல். ஈகோ ஒருபக்கம் இருந்தா லும், இது நாட்டு பெருமை தொடர்பான விஷயம் ஆகும். இதனை உணராமல் பயிற்சி யாளர் சான்டோஸ் செய்த மிகப்பெரிய தவறால் போர்ச்சுக்கல் நாடே சோகத்தில் மூழ்கியது.