games

img

பிரேசில் கலக்கல் - ஒரே ஒரு கோலால் லுஸைல் நகரத்தையே குலுங்க வைத்த ரிச்சர்லிசன்

5 முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி,  அர்ஜெண்டினா அணியைப் போல நடப்பு சீசனில் கோப்பையை வெல்லும் அளவிற்கு மிக பிரம்மாண்ட பார்முடன் கத்தாரில் களமிறங்கியுள்ளது. மஞ்சள் படை ஆதரவுடன் தனது முதல் லீக் ஆட்டத்தில் செர்பியாவை எதிர்கொண்டது. லுஸைல் மைதானத்தில் வெள்ளியன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் ரிச்சர்லிசனின் 2 கோல்களின் உதவியால் 2-0 என்ற கோல் கணக்கில் கலக்கல் வெற்றியை ருசித்தது பிரேசில்.

செர்பியா அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரேசில் அணியின் 2 வெற்றி கோல்களை அடித்தவர் ரிச்சர்லிசன் (62’ ,73’ நிமிடங்களில்) ஆவார். இதில் 73-வது நிமிடத்தில் அடித்த 2-வது கோல் மிகவும் பிரம்மாண்டமானது  ஆகும். ரீ டைவ் முறையில் பல்டியுடன் கோலடித்து அசத்தினார் ரிச்சர்லிசன். அவரது கோலால் மைதானத்தில் குழுமியிருந்த மஞ்சள் படையின் ஆரவாரத்தின் மூலம் போட்டி நடைபெற்ற லுஸைல் நகரமே குலுங்கியது.

;