games

img

விளையாட்டு...

மாட்ரிட்டில் கால்பந்து உலகக்கோப்பை

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடை பெற்ற 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.  உலகக்கோப்பை வென்ற ஸ்பெயின் மகளிர் அணி  குழுவினர், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு திங்களன்று இரவு (ஸ்பெயின் நேரப்படி) சென்றனர். ஸ்பெயின் கேப்டன் இவானா ஆண்ட்ரேஸ் மாட்ரிட் விமான நிலையத்தில் உலகக்கோப்பையுடன் இறங்க, அங்கு குவிந்து இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.  தொடர்ந்து கோப்பையுடன் வீராங்கனைகள் சிறப்பு  பேருந்தில் மாட்ரிட் நகர வீதிகளில் ரோட் ஷோ (ROAD SHOW)  நடத்தினர். உலகக்கோப்பையை காண மாட்ரிட் நகர வீதிகளில் ஸ்பெயின் மக்கள் குவிந்து கோஷங்களுடன் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.

உலகக்கோப்பை மேடையிலேயே அநாகரிகம்
கால்பந்து சங்கத் தலைவருக்கு ஸ்பெயின் அமைச்சர் கடும் கண்டனம்

வெற்றியை கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பதக்கம் அளித்த நிகழ்வுக்குப் பின் ஸ்பெயின்  கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ், உல கக்கோப்பை மேடையிலேயே ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபரை முத்தமிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை யாக வெடிக்க லூயிஸ் ருபியாலெஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஸ்பெயின் விளையாட்டுத்துறை அமைச்சர் மைக்கேல் இசட்டா கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக லூயிஸ் ருபியாலெஸ் மன்னிப்பு கோரவும் அமைச்சர் உத்தரவிட்டார்.  மன்னிப்பு இந்நிலையில், ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரி யுள்ளார். அதில், “ஸ்பெயின் அணி உலகக்கோப்பை வென்றதன் உற்சாகத்தில்தான் ஜெனிபரிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது நடவடிக்கைக்கு பின் எந்த உள்நோக்கமும் இல்லை. இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி எனது நடவடிக்கைகளில் கவனமாக இருப்பேன்” என்று கூறியுள்ளார். 

தந்தை இறந்தது தெரியாமல் சாம்பியன் கோலை அடித்த ஓல்கா கார்மோனா

ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வெற்றி  கோலை அடித்தவர் ஓல்கா கார்மோனா. இவர் 28-வது நிமிடத்தில் அதிரடி கோலை விளாசினார். ஓல்கா கார்மோனா அடித்த கோல் மிகவும் பிரம்மாண்டமானது ஆகும் இவரது கோல் மூலம் ஒட்டுமொத்த ஸ்பெயின் நாடே கொண்டாடி வரும் நிலை யில், ஓல்கா கார்மோனா கொண்டாடும் மனநிலையில் இல்லை. காரணம் நாள்பட்ட நோயினால் நீண்டகாலமாக படுத்த படுக்கையாக இருந்த கார்மோனா வின் தந்தை வெள்ளியன்று காலமானார். ஆனால் தந்தையின் மரணத்தை  கார்மோ னாவிடம் கூறவில்லை. அவரது குடும்பத்தி னர் மறுத்துவிட்டனர். இறுதிப்போட்டி நடை பெற்ற தினத்தன்று (ஞாயிறு) ஆஸ்தி ரேலியா வந்திருந்த ஓல்கா கார்மோனா வன் தயார், சகோதரர்கள் போட்டி நிறைவு பெற்ற பின் தந்தையின் மரணத்தை தெரி வித்தனர். தந்தை இறப்பு அறிவிப்பால் கொண்டாட்ட சந்தோசத்தை கைவிட்டு துவண்டுவிட்டார் ஓல்கா கார்மோனா. “ஓல்கா கார்மோனா ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வரலாறு” என ஸ்பெயின் நாட்டு கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரை இலவசமாக ஒளிபரப்பும் ஹாட் ஸ்டார்
ஹாட் ஸ்டார் டிஸ்னி பிளஸ் என்பது ஸ்டார்  நிறுவனத்தின் ஆன்லைன் ஒடிடி ஆகும். உலகின் முக்கியமான ஒடிடி- யாகவும், நாட்டின் முதன்மையான ஒடிடி பிளாட்பாரமாக வும் உள்ள ஹாட் ஸ்டார் வரவிருக்கும் உலகக்கோப்பை, ஆசி யக்கோப்பை கிரிக்கெட் தொடரை இலவசமாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில் ஹாட் ஸ்டார் ஒடிடி-யில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் தொடரை நேரடியாக காண வேண்டும் என்றால் 3 மாத சந்தா தொகையாக ரூ.149 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில்,  இந்த இலவச அறிவிப்பால் நெட்டிசன்கள் குதூகலம் அடைந்துள்ளனர். அதிர்ச்சியில் அம்பானி நாட்டின் முன்னணி ஒடிடி-யாக வளர கத்தார் உலகக் கோப்பை கால்பந்து, ஐபிஎல் கிரிக்கெட் ஆகிய முக்கிய தொடர்களில் இலவச ஒளிபரப்பை வழங்கியது அம்பானியின் ஜியோ சினிமா. இந்த இலவச ஒளிபரப்பால் ஜியோ சினிமாவின் பெயர் மட்டுமே பிரபலமடைந்துள்ள நிலை யில், ஜியோ சினிமா ஒடிடி பிரபலமடையவில்லை.  இனி வரும் தொடர்களில் இலவச திட்டம் மூலம் ஜியோ  சினிமாவை உச்சத்திற்கு கொண்டு செல்ல அம்பானி திட்ட மிட்டுள்ள நிலையில், அம்பானியின் திட்டத்திற்கு ஹாட்  ஸ்டார் தனது புதிய இலவச திட்டம் மூலம் பிரம்மாண்ட தடுப்புச்சுவர் அமைத்துள்ளது.