games

img

விளையாட்டு செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

இறுதிக்கு முன்னேறி போபண்ணா ஜோடி அசத்தல்

112 ஆண்டு பழமையான டென்னிஸ் தொடரான ஆஸ்தி ரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஆஸ்திரேலியாவின் எப்டன் உடன் ஜோடி சேர்ந்து  விளையாடி வருகிறார்.

வியாழனன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போபண்ணா - எப்டன் ஜோடி, சீனாவின் ஜீஜென் - செக்குடியரசின் தாமஸ் ஜோடியை எதிர்கொண்டது.  தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போபண்ணா ஜோடி 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.  சனியன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் இத்தாலியின் வவா ஸ்சோரியை போபண்ணா - எப்டன் ஜோடி எதிர்கொள்கிறது.

இறுதியில் சபலென்கா

மகளிர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் உலகத்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, உலகத் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா வின் கோகா கவுபை எதிர்கொண்டார். சூப்பர் பார்மில் உள்ள சபலென்கா 7-6 (7-2),  6-4 என்ற செட் கணக் கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார்.

புரோ கபடி 2024 : இன்று 9-ஆவது கட்ட லீக் ஆட்டங்கள் தொடக்கம்
10-ஆவது சீசன் புரோ கபடி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த 8-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெற்றன. தொடர்ந்து 9-ஆம் கட்ட லீக் ஆட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் வெள்ளியன்று தொடங்குகிறது. 9-ஆவது கட்ட லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 2 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

இடம் : பாடலிபுத்ரா மைதானம், 
பாட்னா, பீகார்

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை : சந்தா தொகை கட்டி இருந்தால் பார்க்கலாம்)

பாட்னா - பெங்கால்
(89-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

மும்பை - குஜராத்
(90-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி