games

img

உலக ஹாக்கி தரவரிசை புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

ஹாக்கி போட்டிகளுக்கான உலக தரவரிசையை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது. மகளிர் பிரிவுக்கான தரவரிசையில் நெதர்லாந்து அணி முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இந்திய மகளிர் அணி 6-வது இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணி 6-வது இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். ஆடவர் பிரிவு தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளது.