games

img

விளையாட்டு...

பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பாவை வெளியேற்ற மோடி அரசு திட்டம்

இந்தியாவின் நட்சத்திர பேட் மிண்டன் வீராங்கனையான அஸ்வினி பொன்னப்பா இரட்டையர் பிரிவுகளில்  விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் அஸ்வினி பொன் னப்பா பெரியளவில் கோப்பை மற்றும் பதக்கங்களை கைப்பற்றவில்லை என்றாலும், அவரை வைத்து தான் மக ளிர் இரட்டையர் பிரிவை இந்திய பேட் மிண்டன் சம்மேளனம் மற்றும் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் சமாளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடை பெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந் தியா சார்பில் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி களமிறங்கி, லீக் சுற்றோடு வெளியேறியது. சிறப்பு ஊக்க தொகையாக இருவருக்கும் ஒன்றிய அரசிடமிருந்து தலா 1.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த தகவலை அஸ்வினி பொன்னப்பா மறுத்தார்.இதுதொடர் பாக அவர் கூறுகையில், “இந்த செய்தி யைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சரியான தரவுகள் எதுவுமின்றி எப்படி ஒரு கட்டுரையை வெளியிட முடியும்? இப்படி ஒரு பொய்யை எவ்வாறு எழுத லாம்? 1.5 கோடி ரூபாயை நான் யாரிட மிருந்தும் பெறவில்லை. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். எங்க ளுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கைகூட நிராகரிக்கப்பட்டது” என மோடி அரசை வெளுத்து வாங்கினார். இந்த சம்பவங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றாலும், அஸ்வினி பொன்னப்பா மோடி அரசு ஆத்தி ரத்தில் இருப்பதாகவும், விரைவில் அவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்ற ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக வும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆதாரமாக 2025 மார்ச் மாதத்தில் இருந்து கடந்த 2 மாத காலம்  அஸ்வினி பொன்னப்பா எந்த தொடரி லும் பங்கேற்காமல் உள்ளார். காயம் காரணமாக அவர் பங்கேற்காமல் இருப்பதாக கூறப்பட்டாலும், மோடி அரசுக்கு எதிராக பேசியதாலும், பொய்களை அம்பலப்படுத்தியதன் காரணமாகவே அஸ்வினி பொன்னப்பா  சர்வதேச போட்டிகளில் பங்கேற்கா மல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படு கிறது.

வீடியோ ஹைலைட்ஸிலும் கூட பாலின சமத்துவமின்மை

விளையாட்டுத் துறையில் மிக முக்கியமானது ஹைலை ட்ஸ் வீடியோக்கள் ஆகும். போட்டி யை நேரலையாக பார்க்க முடி யாத ரசிகர்கள், விளையாட்டு ஆர்வ லர்கள், செய்தியாளர்கள், நிபுணர் கள் ஹைலைட்ஸ் வீடியோக்கள் மூலம் அப்டேட்களை அறிந்துகொள்வார்கள்.  கிரிக்கெட், கால்பந்து விளை யாட்டுகளில் ஹைலைட்ஸ் வீடி யோக்கள் மிக நுணுக்கமாகவும், அசத்தலாகவும் இருக்கும். ஆனால் டென்னிஸ் துறையில் ஹைலைட்ஸ் வீடியோக்கள் சுமாராக தான் இருக்கும். அதிலும் பாலின சமத்துவ மின்மை சர்ச்சையே அதிகமாக உள்ளது. காரணம் டென்னிஸ் துறை யில் (கூகுள் தள ஹைலைட்ஸ் + டென்னிஸ் டிவி) ஆடவர் பிரிவிற்கு மட்டுமே அதிகளவில் ஹைலைட்ஸ் வீடியோக்கள் உருவாக்கி வெளி யிடப்பட்டு வருகின்றன. மகளிர் பிரி விற்கு ஹைலைட்ஸ் வீடியோக்கள் அவ்வளவாக வெளியிடுவது கிடை யாது. தற்போது நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொட ரில் ஆடவர் பிரிவில் மட்டும் ஹைலை ட்ஸ் வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப் பட்டு வருகிறது. மகளிர் பிரிவு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உலகில் ஆண்கள் - பெண்கள் இடையே பல்வேறு வகை யில் பாலின பாகுபாடு பார்க்கப்படு கிறது. ஆனால் வீடியோ ஹைலைட்ஸி லும் கூட பாலின சமத்துவமின்மை இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. (குறிப்பு : கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை தவிர்த்து மற்ற சர்வதேச போட்டிகளுக்கு மட்டும் இந்த செய்தி தொகுப்பட்டுள்ளது)