games

img

விளையாட்டு

டயமண்ட் லீக் இறுதிப் போட்டி வெள்ளி வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய நகரான சூரிச் நகரில் டைமண்ட் லீக் போட்டிகள் நடை பெற்று வருகின்றன. இதில் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீ  தூரம் ஈட்டி  எறிந்து இரண்டாமிடம் பிடித்து, டைமண்ட் லீக் தொடரில் 3ஆவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றார். 91.51 மீ  தூரம் ஈட்டி எறிந்த ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் தங்கப் பதக்கமும், டிரினிடாட் அண்ட் டொபாகோ வீரர் வால்காட் 84.95 மீ தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.  நடப்பு சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 82.06 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப்பிடித்தார். மோசமாக இல்லை : நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்ற பின் நீரஜ் சோப்ரா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”இது அவ்வளவு மோசமாக இல்லை. உலக சாம்பியன்ஷிப்பை நெருங்கி வருகிறேன். எனவே, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வீச வேண்டும். சில விஷயங்கள் நன்றாக நடந்தன ; சில விஷயங்கள் நடக்கவில்லை. ஆனால் ஜூலிய னுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிக அதிக தூரம் வீச முடிந்தது. 91 மீட்டர் காட்டியது மிகவும் நன்றாக இருந்தது. முக்கிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், தொலைதூர எறிதல்களை விட தங்கம் முக்கியமானது. எனவே பதக்கம் வெல்ல என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என அதில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மீண்டும் 4:21 மணிநேரம் போராடிய ஆல்ட்மையேர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும்  144ஆவது அமெரிக்க ஓபன் டென் னிஸ் தொடரில் தற்போது தொடக்கச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இந்திய நேரப்படி வெள்ளிக் கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ்,  தரவரிசையில் இல்லாத ஜெர்மனி யின் ஆல்ட்மையேரை எதிர்கொண் டார். ஆல்ட்மையேருக்கு பெரியளவில் கிராண்ட்ஸ்லாம் அனுபவம் இல்லாத நிலையில், அமெரிக்க ஓபன் டென் னிஸ் தொடரில் தீவிர போராட்ட குணத்துடன் விளையாடி வருகிறார். இத்தகைய சூழலில், முதல் சுற்றைப் போலவே தனது இரண்டாவது சுற்றிலும் 4 மணிநேரத்திற்கு மேலாக போராடிய ஆல்ட்மையேர் 7-6 (7-5), 1-6, 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அதிரடிக்கு பெயர் பெற்ற மற்றும் அனுபவமிக்க வீரரான சிட்சிபாஸை 4:21 மணிநேர கடும் சிரமத்துக்கு இடையே வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். குறிப் பாக ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அடுத்தடுத்த டென்னிஸ் சுற்றுகளில் தொடர்ந்து 4 மணிநேரம் போராடிய வீரர் என்ற பெருமையையும் ஆல்ட்மையேர் பெற்றார். பவுல் 4:25 மணிநேரம் இதே பிரிவில் மற்றொரு இரண்டா வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள உள்ளூர் வீரரான (அமெரிக்கா) டாமி பவுல், தரவரிசையில் இல்லாத போர்ச்சுக்கல் நாட்டின் போர்ஜஸை 7-6 (8-6), 6-3, 5-7,  5-7, 7-5 என்ற செட் கணக்கில் 4:25 மணி நேரம் போராடி வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 3ஆவது சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்:  டி மினார்  (ஆஸ்திரேலியா), பெலிக்ஸ் (கனடா), ஜுவரேவ் (ஜெர்மனி), பப்ளிக் (கஜகஸ்தான்)

கவுப் அதிரடி வெற்றி

உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகா கவுப் தனது 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத குரோஷியாவின் வெக்கிச்சை 7-5 (7-6), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதே போல முன்னணி வீராங்கனைகளான ஆஸ்திரேலியாவின் கசட்கினா, அமெரிக்காவின் அனீஸ்மோவா, ரோமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உள்ளிட்டோரும் 2ஆவது சுற்றில் தகுதி பெற்று 3ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.