மெக்சிகோ ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரபேல் நடால் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மெக்சிகோ நாட்டின் அகாபல்கோ நகரில் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரிட்டனை சேர்ந்த கேமரான் நோரியை எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேமரானை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அகாபல்கோவில் நடாலுக்கு இது 4ஆவது சாம்பியன் பட்டம் ஆகும். நடப்பு 2022ம் ஆண்டில் நடாலின் 3ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
பிரிட்டனைச் சேர்ந்த கேமரான் நோரி, கடந்த வாரம் டெல்ரே பீச் கோப்பையைக் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.