கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி-பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டிகள் புனேவுக்கு பதிலாக மும்பையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், பேட்ரிக் ஃபர்ஹாட், சேத்தன்குமார், டாக்டர் அபிஜித் சால்வி, மற்றும் ஆகாஷ் மானே ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் அவர்கள் டெல்லி அணியில் இணைவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதனால் புனேவில் நாளை நடைபெறவிருந்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம், மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
2020 ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ஐக்கிய அமீரகத்திலும், 2021ல் இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் 2021 போட்டிகள் பாதியில் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.