games

img

விளையாட்டு...

கிரிக்கெட் போட்டியை நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை போன்று பேசுவதா?

பாகிஸ்தான் பிரதமருக்கு வலுக்கும் கண்டனம்

9ஆவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ் தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங் கள் மட்டும்) பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில்  வங்கதேசத்தை (பிப்ரவரி 20) எதிர்த்து விளையாடவுள்ளது. தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர் கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி நடை பெறவுள்ளன.  இந்நிலையில், பாகிஸ் தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ”சாம்பியன்ஸ் டிராபியை வெல் வது மட்டும் பாகிஸ்தான் அணி யின் இலக்கல்ல. இந்திய அணியை வீழ்த்துவதும் தான்” என சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார்.  புதுப்பிக்கப்பட்ட கடாபி மைதானத்தை திறந்து வைத்த ஷாபாஸ் ஷெரீப் இதுதொடர் பாக மேலும் கூறுகையில், ”நம்மிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்க ளில் நமது வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரு கிறார்கள். ஆனால் உண்மை யில் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தா னின் இலக்கல்ல. இந்திய அணியை வீழ்த்துவதும் பாகிஸ்தான் அணியின் இலக் காகும். ஒட்டு மொத்த பாகிஸ்தா னும் நமது வீரர்களுடன் துணை நிற்கிறது” என அவர் கூறினார். கண்டனம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக் கெட் தொடர் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒரு  உலக தொடர் தான். இதில் வெற்றி, தோல்வி, நாடுகளு க்கு இடையேயான மோதல் இருக்கும். அதே போல ஷாபாஸ் ஷெரீப் கூறியது கிரிக் கெட் போட்டிக்கானது என்றா லும், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை உள்ள சூழலில் பிரதமர் போன்ற ஒரு நாட்டின் மிகப் பெரிய தலைவர் கிரிக்கெட் போட்டியின் வெற்றியை பேசுவது தேவையில்லாதது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் போல யாரும் இதுவரை இவ்வாறு பேசிய தில்லை. அதனால் அவரது பேச்சிற்கு உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் மட்டுமின்றி, பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியர்கள் எங்களின் சகோதரர்கள் : பாகிஸ்தான் ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யை பாகிஸ்தான் கைப் பற்றினாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான். அதே போல பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப் பற்றினாலும் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் நாங்கள் சகோதரர்கள் என பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை இந்தியர்கள் வரவேற்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இன்று 2ஆவது போட்டி

இந்தியாவிற்கு சுற்றுப்ப யணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொ டரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டத்தில் (வியாழக்கிழமை - நாக்பூர் : மகா ராஷ்டிரா) இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறு கிறது.  தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில்  இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியா  -  இங்கிலாந்து
இடம் : பாரபதி மைதானம், கட்டாக், ஒடிசா
நேரம் : மதியம் 1:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)