புதனன்று நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றியுடன் இறுதி சுற்றுக்கு நுழைந்தது. இந்த ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பரீத் ஆவேச மாக கத்தியதை கண்டு ஆத்திரம் அடைந்த ஆசிப் அலி, பரீத்திடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டு, தனது பேட்டை கொண்டு அவரை அடிக்க ஓங்கினார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் மிகுந்த பரபரப்பு சூழல் ஏற்பட்ட நிலையில், நடு வர்களும் இருநாட்டு வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், “பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் செயல் முட்டாள்தனமானது. எஞ்சிய போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்க வேண்டும். பந்து வீச்சாளருக்கு விக்கெட் கைப்பற்றியதை கொண்டாட உரிமை உண்டு. கிரிக்கெட் விளையாட்டில் உடல் ரீதி யான தாக்குதல் முயற்சி செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என ஆசியக்கோப்பை நிர்வாகத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைமை நிர்வாகி ஷபிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.