அக். 18 முதல் புரோ கபடி போட்டிகள் போட்டி அட்டவணை வெளியானது
குறுகிய காலத்தில் பிரபல மடைந்த புரோ கபடி தொட ரில் இதுவரை 10 சீசன்கள் நிறை வடைந்த நிலையில், 11ஆவது சீசன் வரும் அக்டோபர் 18 அன்று தொடங்கும் என்றும், தொடக்க ஆட்டங்கள் தெலுங் கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெறும் என்ற அறிவிப்புடன் அட்ட வணைப் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனைப் போலவே 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் 3 நகரங்களில் நடத்தப்பட உள்ளன. முதல் பகுதி ஆட்டங்கள் ஹைதராபாத்தில் அக்டோ பர் 18 முதல் நவம்பர் 9 வரையிலும், 2ஆவது கட்ட ஆட்டங்கள் உத்தரப்பிர தேச மாநிலம் நொய்டாவில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 1 வரையிலும், 3 ஆவது பகுதி லீக் ஆட்டங்கள் மகா ராஷ்டிரா மாநிலம் புனேயில் டிசம்பர் 3 முதல் 24 வரையிலும் நடைபெற உள்ளது. அக்டோபர் 18 அன்று நடை பெறும் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து நடைபெறும் 2ஆவது போட்டியில் தில்லி – மும்பை அணிகள் மோத உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி தனது தொடக்க லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை எதிர்கொள்ளும் நிலை யில், இந்த ஆட்டம் அக்டோபர் 19 அன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
அமெரிக்க ஓபன் சாம்பியன் இத்தாலி வீரர் சின்னருக்கு சிக்கல்
இத்தாலி நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரும், சமீபத்தில் நிறைவு பெற்ற அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஜானிக் சின்னர் கடந்த மார்ச் மாதம் அனபோலிக் என அழைக்கப்படும் ஸ்டீராய்ட் பயன்படுத்தியதாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். எனினும் ஊக்கமருந்து சோதனையை அறிக்கையாக வெளி யிடுபவர் கணினி மூல மாக தவறு இழைத்த தால் சின்னர் இடை நீக்கம் செய்யப்பட வில்லை. அதாவது அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சின்னரை ஊக்கமருந்து சோதனையில் விடுவித்த வழக்கை மீண்டும் கையிலெடுக்க உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை (WADA) தீவிரமாக இறங்கியுள்ளது. இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியான நாடோ இத்தாலியா (ITIA) அனபோலிக் சோதனை அறிக்கை மூலம் பெறப்பட்ட அறிக்கையை உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை ஆராய்ந்து சின்னர் மீதான நடவடிக்கை குறித்து தீர்ப்பு வழங்கும். ஒருவேளை சின்னர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தால் 2024இல் அவர் வென்ற பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் பியூமண்ட் சாதனை
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அயர் லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாடி வரு கிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டி இந்திய நேரப்படி செவ்வா யன்று அதிகாலை நடைபெற்றது. முதலில் கள மிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 16.5 ஓவரிலேயே அனைத்து விக் கெட்டுகளையும் இழந்து 45 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய அந்நாட்டின் அதிரடி வீராங்கனை பியூமண்ட் (150 ரன்கள்) மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் (ஒருநாள்) அதிக சதங்கள் (10) அடித்த வீராங்கனைகள் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் (15) மற்றும் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.