games

img

விளையாட்டு...

மீண்டும் இனவெறி சர்ச்சை மான்செஸ்டர் சிட்டி அணியில் இருந்து விலகுகிறார் ஜமைக்கா வீராங்கனை

இங்கிலாந்து நாட்டில் ஆடவருக்கு கிளப் லீக் தொடர் நடத்தப்படுவது போல, சூப்பர் லீக் என்ற பெயரில் மகளிருக்கும் கிளப் போட்டிகள் நடத்தப்பட்டு வரு கிறது. பிப்ரவரி 2ஆம் தேதி அன்று நடைபெற்ற லீக் போட்டி யில் மான்செஸ்டர் சிட்டி - அர்சனல் அணிகள் மோதின. இந்த  ஆட்டத்தில் அர்சனல் 4-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளை யாடி வரும் ஜமைக்கா நாட்டு வீராங்கனையான கதிஜா ஷா  அர்சனல் அணிக்கெதிரான ஆட்டத்தில் நிறம் மூலம் இன வெறி துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் யார்  கதிஜா ஷாவை இனவெறி மூலம் தூண்டியது என்பது  தொடர்பாக மான்செஸ்டர் சிட்டி அணி நிர்வாகம் எந்த தக வலையும் கூறவில்லை.  ஆனால் போட்டி நிறைவுப்பெற்ற பின்பு மான்செஸ்டர் சிட்டி காவல்துறையில் புகார் அளித்த  பின்பே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தகைய சூழலில் இனவெறி துன்புறுத்தல் காரணமாக  கதிஜா ஷா மான்செஸ்டர் சிட்டி அணியில் விலக உள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இதுதொடர் பாக மான்செஸ்டர் சிட்டி நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெராயாஸ் நீக்கமா? ரசிகர்கள் கண்டனம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொ டரில் விளையாடி வருகிறது. வியாழக் கிழமை அன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் (நாக்பூர்-மகா ராஷ்டிரா) இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மூத்த வீரர்  விராட் கோலி காயம் காரணமாக (கால்  வீக்கம்) விலக, அவருக்கு பதிலாக  ஷெராயாஸ் களமிறங்கினார். சூப்பர்  பார்மில் உள்ள ஷெராயாஸ் கொடுத்த  வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு 59 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.  இந்நிலையில், கோலிக்கு கால்  வீக்கம் சரியாகி விட்டதால், அவர் இரண் டாவது போட்டியில் விளையாடுவார் என  செய்திகள் வெளியாகி உள்ளன.  ஆனால் கோலிக்கு பதிலாக யாரை  அணியில் இருந்து நீக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பலமாக கிளம்பியுள்ள நிலையில், ஷெராயாஸை நீக்க திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. சூப்பர் பார்மில் உள்ள ஷெரா யாஸை ஏன் நீக்க வேண்டும்? அவரை  நீக்குவதற்கு பதிலாக ராகுல் அல்லது ஜெய்ஸ்வாலை நீக்குங்கள் என ரசி கர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற னர்.

வேலை நேரத்தை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்க வரலாமா?

சமூக வலைதளங்களில் வறுபடும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற 5ஆவது டி-20 போட்டி மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தை இன்போசிஸ் நிறுவனர்  நாராயணமூர்த்தி விஐபி பெவிலியனில் அமர்ந்து பார்த்தார். இதனை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் செல்போ னில் புகைப்படம் எடுத்து,”எங்களை ஓய்வு இல்லாமல், நேரத்தை வீணடிக்காமல், 70 மணிநேரம் வேலை பார்க்கக் கூறும் இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு இங்கு என்ன வேலை. அவர் ஓய்வுக்காக வந்துள்ளாரா? இல்லை, நேரத்தை வீணடிக்க வந்துள்ளாரா? என நெட்டிசன்கள் சர மாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.