games

img

விளையாட்டு...

கம்பீர் இப்படியே பேசினால்  ஐபிஎல் போட்டிகளுக்கு யாரும் வரமாட்டார்கள்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில்,”நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோல்வியடையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நியூஸிலாந்து அணியில் நட்சத்திர வீரரான வில்லியம்சன் கூட இல்லை. ஆசிய மண்ணில் வில்லியம்சன் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் அவர் இல்லா மலே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது” எனக் கூறி விராட் கோலியையும் சிலவார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.  இதற்கு பதிலடி என்ற பெயரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்,”இந்திய கிரிக்கெட் அணியுடன் ரிக்கி பாண்டிற்கு என்ன தொடர்பு? இந்திய அணி மற்றும் வீரர்களைப் பற்றி கவலைப்படாமல், அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பற்றி  சிந்திக்க வேண்டும்” என சர்ச்சைக் குரிய வகையில் பேசினார். சஞ்சய் மஞ்சுரேக்கர் எச்சரிக்கை கம்பீரின் கருத்திற்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி யதைக் கேட்டேன். இனிமேல் கம்பீரை  செய்தியாளர்களிடம் அண்ட விடா தீர்கள். அவர் திரைக்குப் பின்னாலேயே இருக்கட்டும். செய்தியாளர்களிடம் உரையாடும் திறனோ, அதற்குரிய சரியான வார்த்தையோ, சரியான நடத்தையோ அவரிடம் இல்லை. ரோகித் சர்மா அல்லது அகார்கர் இதற்கு சிறந்த நபர்கள் என்று நினைக்கிறேன். கம்பீரிடம் செய்தியாளர்களிடம் பேசும் ஒழுக்கம் இல்லை” என கண்டனம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்கு  யாரும் வர மாட்டாங்க...  இந்திய ஆடவர், மகளிர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் பயிற்சியாளர், இதர பணியாளர்களில்  (பிஸியோ) இந்தியர்கள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டவர்களும் பணியாற்றி வருகின்ற னர். ஆனால் பாஜக அரசியல் நிகழ்ச்சி நிரல் போல கவுதம் கம்பீர் எங்கள் நாட்டைப் பற்றியோ, எங்கள் நாட்டு வீரர்கள் பற்றியோ பேச வேண்டும் என  எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் நாட்டை பற்றி பேச வேண்டாம் எனக்  கூறினால், இனிமேல் ஆஸ்திரேலிய உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் யாரும் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளுக்கு வராத சூழல் உருவாகும். அதனால் பாஜகவினர் போல பேசாமல் கிரிக்கெட் பயிற்சியாளரைப் போல பக்குவமாக பேசுவது நல்லது. இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பாஜக முன் னாள் எம்.பி., என்பது குறிப்பிடத் தக்கது. 

பதிலடி கொடுக்குமா இந்தியா? இன்று 3ஆவது டி-20 போட்டி

4 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான முதல் டி-20 போட்டியில்  (டர்பன்) இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டி-20 போட்டியில் (ஜார்ஜ் பார்க்) தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3ஆவது டி-20 போட்டி புதனன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : ஜார்ஜ் பார்க் மைதானம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18,
ஜியோ சினிமா (ஓடிடி)

இன்றைய ஆட்டங்கள்

இரண்டு ஆட்டங்களும்:  நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம்.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)