games

img

இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இப்போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. அதாவது,  பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதலால், சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டது.

இதைதொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது மற்றொரு பிரச்சனையையும் பிசிசிஐ கிளப்பியுள்ளது. அதாவது, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐசிசி) புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.