games

img

கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த்  

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவுகளில், பி.வி. சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  

தென் கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் 7 ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். 43 நிமிடங்கள் தொடர்ந்த இந்த போட்டியில் 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, 21-10, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பூசனன் ஓங்பாம்ருங்பானை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  

இதையடுத்து இன்று காலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், கொரிய வீரர் வான்ஹோவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆட்டத்தில் சன் வான் ஹோவை 21-12, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.  

மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் வீரராக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி ஸ்ரீகாந்த் தடம் பதித்துள்ளார்.