games

img

ரஷ்யா இல்லாததால் அமெரிக்காவுக்கு சாதகம்

உக்ரைன் போரால் ரஷ்யா உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம்  தடைவிதித்துள்ளது. ரஷ்யா இல்லாதது அமெரிக்காவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தடகள உலகில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவிற்கு இணையாக அனைத்து பிரிவுகளிலும் சரிசமமாக போட்டியிடுவதில் ரஷ்யா வீரர் - வீராங்கனைகள் வல்லவர்கள். அவர்கள் இல்லாதது அமெரிக்கர்களுக்கு உலக தடகள சாம்பியன்ஷிப் சாதாரண உள்ளூர் தொடர் போன்று விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். சரி ரஷ்யா தான் இல்லை. அவர்கள் இடத்தை சீனா பிடித்து அமெரிக்காவிற்கு எதிர்ப்புடன் போராடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனர்களுக்கு நடப்பு சீசனில் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அமெரிக்காவிற்கு ஈடாக விளையாடக்கூடிய சீன வீரர் - வீராங்கனைகளும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பதக்கப்பட்டியலில் டாப் 5-க்குள் கூட இடம்பெற முடியாமல் சீன (பதக்கப் பட்டியலில் 6-வது இடம்) போராடி வருகிறது.