games

img

கூகுளில் ரஷ்யா, பெலாரஸ் கொடிகள் நீக்கம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட  20-க்கும் மேற்பட்ட நாடுகள் பொருளாதார உள்ளிட்ட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், விளையாட்டுத் துறையும் தன் பங்கிற்கு ரஷ்யா சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.  ரஷ்யா மட்டுமின்றி அதனுடைய நட்பு நாடான பெலாரஸ் நாட்டின் மீதும் விளையாட்டு தொடர்பான பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் ஒருபடி மேல் சென்று தனது வலைதள (ஸ்கிரீனில் மட்டும்) விளையாட்டு அமைப்புகளில் (ஸ்கோர் கார்டு) உள்ள ரஷ்யா, பெலாரஸ் கொடிகளை அகற்றி வெறும் வீரர் - வீராங்கனைகள் பெயர்களை மட்டுமே பதிவிட்டு வருகிறது. இந்த செயல்பாடு தற்போது இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வித்தியாசமான செயல்பாட்டிற்கு ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் இன்னும் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை.

மகளிர் உலகக்கோப்பை  கிரிக்கெட்
வெள்ளியன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டம்
இந்தியா - ஆஸ்திரேலியா
இடம் : ஈடன் பார்க், ஆக்லாந்து (நியூசி.,)
நேரம் : காலை 6:30 (இந்திய நேரம்)