games

காமன்வெல்த் பதக்கப்பட்டியல்: சரிவுப் பாதையில் இந்தியா

22-வது காமன்வெல்த் தொடர் இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரான பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய வீரர் - வீராங்கனைகள் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில்  இருந்த இந்தியாவை பின்னுக்குத்தள்ளிய ஸ்காட்லாந்து, 4 தங்கப்பதக்கங்களை கூடுதலாக வென்று 5-வது இடத்திற்கு முன்னேறியது. 5-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திற்கு முன்னேற 7-வது இடத்திற்கு இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 மொத்தம் பதக்கங்களை குவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை குவித்து 3-வது இடத்தில் இருந்தது. ஆனால் சொதப்பலான சம்பவங்களால் புள்ளிப்பட்டியலில் டாப் 5-க்கு கூட முன்னேற முடியாமல் கடுமையாக போராடி வருகிறது.

இங்கிலாந்து கலக்கல்

நடப்பு சீசன் காமன்வெல்த் தொடரில் ஆஸ்திரேலிய நாடு  தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. போட்டியை நடத்தும் இங்கி லாந்து நாடு சுமாரான வேகத்தில்  பதக்கத்தை குவித்து பதக்கப்பட்டி யலில் தொடக்கம் முதலே 2-வது  இடத்தில் நீடித்து வருகிறது. ஆனால் கடந்த 4 நாட்களாக இங்கிலாந்து வீரர் - வீராங்கனைகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. திடீரென உத்வேகம் பெற்று பதக்கங் களை ஜெட் வேகத்தில் குவித்து வரு கின்றனர். குறிப்பாக கடந்த 3 நாட்கள் மட்டும் ஆஸ்திரேலியாவிற்கு ஈடாக  பதக்கங்களை குவித்து அசத்தியுள்ள னர். இதே வேகத்தில் சென்றால் கடைசி 2 நாட்களில் ஆஸ்திரேலிய அணியை எளிதாக பின்னுக்குத்தள்ளலாம். ஆனால் காமன்வெல்த் தனிநபர் செயல்பாடு இல்லை. ஒட்டுமொத்த நபர்களும் பார்மோடு விளையாடி பதக்கங்களை குவித்தால்தான் பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னக்குத்தள்ளுவது சாத்தியமாகும். 8 தங்கம், 8 வெண்கலம் என 14 பதக்கம் (வெள்ளியில் 2 பதக்கம் ஆஸ்திரே லியாவை விட கூடுதலாக இங்கிலாந்து வென்றுள்ளது) வித்தியாசத்தில் தான் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து முதல் இரண்டு இடங்களில் உள்ளது.