games

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஜபியூர்

அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் நடைபெற்று வரும் 142-வது சீசன் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மக ளிர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரை யிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உல கின் முதல்நிலை வீராங்கனையும், போலந்து நாட்டின் நட்சத்திரமுமான ஸ்வியாடெக், பெலாரஸின் சபலென்காவை 3-6, 6-1, 6-4 என்ற செட்  கணக்கில் வீழ்த்தி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறியுள்ளார். 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற துனிசியா வின் ஜபியூர் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கார்சியாவை புரட்டியெடுத்து,  ஸ்வியாடெக்கை போலவே ஜபியூரும் அமெரிக்க ஓபன்  டென்னிஸ் தொடரில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயி றன்று அதிகாலை 1:30 மணிக்கு தொடங்குகிறது.

கலப்பு இரட்டையர் - இன்று இறுதி ஆட்டம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் சாண்டர்ஸ் - ஜான் ஜோடி, கிர்ஸ்டன் (பெல்ஜியம்) - ரோஜர்ஸ் (பிரான்ஸ்) ஜோடியை எதிர்கொள்கிறது. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி சனியன்று காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக காணலாம். சோனி லைவ் (SONY LIVE) சந்தா இருந்தால் ஸ்மார்ட்போன்களில் இலவசமாக காணலாம்.

;