games

img

சென்னை ஓப்பன் டென்னிஸ்: கால் இறுதியில் செக். வீராங்கனை

சென்னை, செப்.14- சர்வதேச மகளிர் சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி ஆட்டத்திற்கு செக் குடி யரசின் இளம் வீராங்கனை லின்டா முன்னேறினார். சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் புதன் கிழமை (செப்.14) இரண்டாவது சுற்று ஆட்டத்தில்தொடரின் மிக இளம் வயது வீராங்கனையான செக். குடியரசின்  லின்டா புரு விர்டோவா, ஸ்வீடனின் ரெபெக்கா பீட்டர்சனை எதிர் கொண்டார். ஆரம்பம் முதலே இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இத னால் ஆட்டத்தில் அனல் பறந்தது.  நீண்ட நேரம் போராடிய 17 வய தான லின்டா, முதல் செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் தன் வசப்படுத்தினார். இரண்டாவது செட்டையும் அதிரடியாக துவக்கிய லின்டா தொடர்ந்து புள்ளிகளை குவித்தார். ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதி யில் 6-4,6-2 என்ற நேர் புள்ளிகள் கணக்கில்  லின்டா ரெபெக்காவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.

சாம்பியனுக்கு அஞ்சலி

பிரிட்டிஷ் இந்தியாவில் லாகூரில் பிறந்தவரும் இந்திய டென்னிஸ் முன்னாள் வீரருமான நரேந்திர குமார் தனது 93 வது வயதில் செப்டம்பர் 14 அன்று கொல்கத்தாவில் மரணம் அடைந்தார். இந்திய அணிக்காக டேவிஸ் கோப்பையை வென்று கொடுத்தவர். அது மட்டுமன்றி சுதந்திர இந்தியாவில் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் முதலாக விளையாடியவர். 1952 மற்றும் 53 ஆம் ஆண்டுகளில் நடந்த ஐரிஷ் சாம்பியன் ஒற்றைய பட்டங்களை தொடர்ந்து இரண்டு முறை வென்றவர். 1955 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஒற்றைய போட்டியில் நான்காம் சுற்று வரைக்கும் முன்னேறியவர். டென்னிஸ் உலகில் இந்திய அணிக்காக பேரு தொடர்களில் விளையாடி ஓய்வு பெற்ற அவரது மறைவுக்கு சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் முன்னாள் இந்திய நட்சத்திரங்களான விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ், பிரகாஷ் அமிர்தராஜ், பிரேம்குமார் காரா, லட்சுமி மாதவன், ஜெயலட்சுமி,  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
 

;