வியாழன், மார்ச் 4, 2021

games

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்...  இறுதியில் ஜோகோவிச்...

மெல்போர்ன் 
கிரண்ட்ஸாலம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ஆளாக இறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் ரஷ்யாவின் காரஸ்டேவ்வை 6-3,6-4,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். 

இதே பிரிவில் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் நபர் ஜேகோவிச்சுடன் இறுதிக்கு முன்னேறுவர். 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மெத்வதேவ், கிரீஸின் சிட்ஸிபாஸ் ஆகியோர் மோதுகின்றனர். 
மகளிர் ஒற்றையர் பிரிவில்  ஜப்பானின் ஒசாகா, அமெரிக்காவின் பிரடி ஆகியோர் இறுதிக்கு முன்னேறினர்.இந்த பிரிவில் இறுதியாட்டம் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.  

;