விம்பிள்டன் டென்னிஸ் கோப்பை யாருக்கு?
ஜபியூர் - வொன்டரவ்சோவா இன்று பலப்பரீட்சை
146 ஆண்டுகால பாரம்பரியமிக்க டென்னிஸ் தொடர்களில் முக்கியமானதும், அதிக பரிசுத்தொகை கொண்ட கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் துனிசியா வீராங்கனையான ஜபியூரை, செக் குடியரசு வீராங்கனை வொன்டரவ்சோவா எதிர்கொள்கிறார்.
ஜபியூர் - வொன்டரவ்சோவா
நேரம் : மதியம் 3:30 மணிக்கு மேல் (தோராயமாக மாலை நேரத்தில் நடைபெறும்)
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்
இந்தியா - மேற்கு இந்திய தீவுகள்
(முதல் டெஸ்ட்- 4வது நாள்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : வின்ட்சோர் பார்க், டோம்னிகா
சேனல் : தூர்தர்சன் (அனைத்து மொழிகளிலும்),
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)
யாருக்கு வாய்ப்பு?
வலது கை பழக்கம் உடையவரான ஜபியூர் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். இடதுகை பழக்கம் உடைய வொன்டரவ்சோவா நடால் போல போராட்ட குணமிக்கவர். இருவரும் இதுவரை கிரண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை என்றாலும், ஜபியூர் 2 முறை கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் (விம்பிள்டன் 2022, அமெரிக்க ஓபன் 2022) இறுதிக்கு முன்னேறி பட்டத்தை நழுவ விட்ட அனுபவம் உடையவர். கடந்த விம்பிள்டன் சீசனில் கஜகஸ்தான் வீராங்கனை ரைபைகினாவிடம் வீழ்ந்து வெளியேறிய நிலையில், நடப்பு சீசனில் கண்டிப்பாக பட்டம் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறார் ஜபியூர். கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதல் முறையாக இறுதிக்கு முன்னேறியுள்ள வொன்டரவ்சோவா ஒலிம்பிக்கில் பதக்கம் (2020 - ஜப்பான்) வென்றவர். தனது இடதுகை பலத்தால் கணிக்க முடியாத ஷாட்களை விளாசக் கூடியவர். இதுதான் வொன்டரவ்சோவாவின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இந்த பிளஸ் பாயிண்ட் ஆட்டத்தின் மூலமே நடப்பு சீசன் விம்பிள்ட னில் பல முக்கிய வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளார். இப்படி 2 வீராங்கனைகளிடம் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால் யாருக்கு கோப்பை என திடமாக கருத்து கூற முடியாது. எனினும் முதல்முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இரு வீராங்கனைகளும் களமிறங்குவதால் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசுத்தொகை
சாம்பியன் - ரூ.25 கோடி (23 லட்சம் பவுண்ட்)
2-ஆம் இடம் - ரூ. 12 கோடி (11 லட்சம் பவுண்ட்)
இதுபோக அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட் சுற்றில் வெளியேறியவர்களுக்கும் போதுமான அளவில் பரிசுத்தொகை உள்ளது. முதல் சுற்றில் வெளியேறிய வீராங்கனைகளுக்கு கூட ரூ.59 லட்சம் பரிசுத்தொகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் இரட்டையர் பிரிவு
பட்டம் வெல்வது யார்?
வெஸ்லி (நெதர்லாந்து),
நீல் (பிரிட்டன்) -
ஹொரோசியோ (அர்ஜெண்டினா),
மார்செல் (ஸ்பெயின்)
நேரம் : தோராயமாக மதியம் அல்லது மாலை நேரத்திற்கு பிறகு நடைபெறலாம்.
பரிசுத்தொகை
சாம்பியன் - ரூ.6 கோடி
(6 லட்சம் பவுண்ட்)
2-ஆம் இடம் - ரூ.3 கோடி (3 லட்சம் பவுண்ட்)
இதுபோக அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட் சுற்றில் வெளியேறியவர்களுக்கும் போதுமான அளவில் பரிசுத்தொகை உள்ளது.
பரிசுத்தொகை
சாம்பியன் - ரூ.25 கோடி (23 லட்சம் பவுண்ட்)
2-ஆம் இடம் - ரூ. 12 கோடி (11 லட்சம் பவுண்ட்)
இதுபோக அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட் சுற்றில் வெளியேறியவர்களுக்கும் போதுமான அளவில் பரிசுத்தொகை உள்ளது. முதல் சுற்றில் வெளியேறிய வீராங்கனைகளுக்கு கூட ரூ.59 லட்சம் பரிசுத்தொகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங் வாய்ஸ்...
“மேற்கு இந்தியத் தீவு களுக்கு எதிரான சதம் எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந் தது. இது எனக்கு நீண்ட பயணம். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சதத்தை என் பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால், அவர்கள் என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுவே என் ஆரம்பம்” மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில்...
செப்டம்பரில் புரோ கபடி ஏலம்
விளையாட்டு உலகில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொடராக வளர்ந்துள்ள புரோ கபடி தொடரின் 10-வது சீசனுக்கான ஏலம் செப்டம்பர் மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெறுகிறது. மொத்தம் 500 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் ஏ, பி, சி, டி என 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. 4 பிரிவுகளிலும் ஏல அடிப்படை தொகை குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏல அடிப்படை தொகை
ஏ - ரூ.30 லட்சம்
பி - ரூ.20 லட்சம்
சி - ரூ.13 லட்சம்
டி - ரூ. 9 லட்சம்