games

வான்டரர்ஸ் டெஸ்ட் : இந்தியா சொதப்பல்

இந்திய கிரிக்கெட் அணி  தென் ஆப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்  ஆட்டத்தில் (செஞ்சுரியன்) இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2 டெஸ்ட் போட்டி ஜோஹன் னஸ்பார்க்  நகரில் உள்ள வான்டரர்ஸ் ஸ்டேடியம் மைதானத்தில் திங்களன்று தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து தென் ஆப்பிரிக்கவீரர்களின் துடிப்பான வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 202 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடியது.  இந்திய கேப்டன் ராகுல் பந்துவீச்சாளர்களை அடிக்கடி மாற்றியும் பலனில்லை. கடைசியாக சர்தூல் தாக்கூரை களமிறக்க அவர் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 2ஆம் நாளின் மதிய உணவு இடைவேளையின் பொழுது தென் ஆப்பிரிக்கா  அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் ஆலிவியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.