games

img

இந்திய பந்துவீச்சாளர்கள் திணறல் ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரே லிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் (பார்டர் - காவஸ்கர் டிராபி) விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொட ரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 போட்டிகளிலும், ஆஸ்திரே லியா ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 4-வது மற்றும்  கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநி லம் அகமதாபாத்தில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில்  களமிறங்கியது. உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத் திற்கு தகுதி பெற வேண்டுமானால் இந்த டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றி என்ற நிலையில் இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் நடத்தி யது. ஆனால் ஆஸ்திரேலிய அணி மிடில் ஆர்டர் வீரர்கள் இந்திய அணியின் வேகம் கலந்த சுழல் தாக்கு தலை சமாளித்து திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர் காவஜா அகமதாபாத் மைதானத்தில் நங்கூரம் அமைத்து ரன்கள்குவித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள்  குவித்துள்ளது. காவஜா(104), க்ரீன்(49) ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று 
இந்தியா - ஆஸ்திரேலியா
(2-ஆம் நாள் ஆட்டம்)
நேரம் : காலை 9:30 மணி
இடம் : அகமதாபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார்

;