games

img

விளையாட்டு முக்கிய செய்திகள்

டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை
துவக்க ஆட்டத்தில் அமெரிக்கா அபார வெற்றி

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுக ளில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் துவக்க ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா நாடுகள் மோதின. 

இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு துவங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முத லில் களமிறங்கிய கனடா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194  ரன்கள் குவித்தது. 195 ரன்கள் எடுத் தால் வெற்றி என்ற கடினமான இலக்கு டன் களமிறங்கிய அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை (197 ரன்கள்) எளிதாக எட்டி, உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை ருசித்தது அமெரிக்கா. அதிரடி ஆட்டத்துடன் வெற்றிக்கு உதவிய அமெரிக்க வீரர் ஆரோன் ஜோனஸ் (94 ரன்கள் விளாசினார்) ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்டார்.

அனுபவமில்லா அமெரிக்காவிடம் அடி வாங்கிய சீனியர் கனடா

அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் தங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வம்சாவளி வீரர்களை வைத்து உலகக்கோப்பையில் கள மிறங்கியுள்ள நிலையில், அமெரிக்கா வை விட கிரிக்கெட் விளையாட்டில் கனடா நாடு சீனியர் ஆகும். டி-20 உல கக்கோப்பையில் முதன்முறையாக கனடா களமிறங்கினாலும், ஒருநாள் உலகக்கோப்பையில் 1979 முதல் 5 தொடர்களில் விளையாடிய சீனியர் அணி ஆகும். ஆனால் அமெரிக்கா முதன்முறையாக 9ஆவது சீசன் உலகக்கோப்பையில் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் கள மிறங்கி, முதல் ஆட்டத்தில் கனடா அணியை பந்தாடியுள்ளது ஆச்சர்ய த்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய  ஆட்டங்கள்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம்)

நமீபியா - ஓமன்
இடம் : பார்படாஸ், 
மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி

இலங்கை - தென் ஆப்பிரிக்கா
இடம் : நியூயார்க், அமெரிக்கா
நேரம் : இரவு 8:00 மணி

ஐரோப்பிய லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் சாம்பியன்

கால்பந்து உலகில் பிரசித்தி பெற்ற லீக் தொடரான சாம்பியன்ஸ் லீக் (ஐரோப்பிய லீக் கோப்பை) தொடரின் நடப்பாண்டுக்கான சீசனின் இறுதி ஆட்டம் ஞாயிறன்று அதிகாலை நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டின் லண்டனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின் கிளப்) - பொருசியா டார்ட்மண்ட் (ஜெர்மன் கிளப்) ஆகிய அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் பெற்றது. ரியல் மாட்ரிட்டிற்கு இது 15ஆவது சாம்பியன்ஸ் லீக் கோப்பை ஆகும்.