பொதுவாக எவ்வித டென்னிஸ் தொடர்கள் என்றாலும் தரவரிசையில் டாப் 10-இல் உள்ள வீராங்கனைகள் அரையிறுதி, இறுதி சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள். இது தான் காலம் கடந்த செயல்பாடாக உள்ளது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது வீராங்கனை கோகோ கவுஃப் 18-வது தரவரிசையில் இருந்துகொண்டு இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். கவுஃப் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் இறுதி சுற்றுக்கு இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸில் இறுதிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் இரட்டையர் (இறுதி ஆட்டம்)
இவான் (குரோஷியா) - ஆஸ்டின் (அமெரிக்கா) /மார்சிலோ (அர்ஜென்டினா) - ஜீன் ரோஜர் (நெதர்லாந்து)
(இந்தப் பிரிவில் கோப்பையைக் கைப்பற்றும் என அதிகம் எதிர்பார்த்த
போபண்ணா ஜோடி அரையிறுதியில் வெளியேறியது.)