games

img

ஆஸி., கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா

ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்த பிரச்சனை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  2018-ஆம் ஆண்டு முதல் பயிற்சியா ளராக பணியாற்றி வரும் லாங்கரின் பத விக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரே லிய அணி அபார வெற்றி பெற்றதால் தனது பயிற்சியாளர் பொறுப்பு மேலும் நீடிக்கப் படும் என எதிர்பார்த்தார். எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் லாங்கரின் பதவிக்காலத்தை நீட்டித்தது. ஆனால் ஒப்பந்த வருடங்கள் எதுவும் சரிவர குறிப்பிடாமல் குறுகிய காலத்தில் மட்டுமே நீங்கள் பயிற்சியாளராக செயல்பட முடியும் எனக் கூறியுள்ளது. இதனை எதிர் பார்க்காத ஜஸ்டின் லாங்கர் தனது பயிற்சி யாளர் பதவியை ராஜினாமா செய்வதாக  அறிவித்தார். தற்காலிகப் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப் பட்டுள்ளார்.