games

img

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரான ‘ட்ரீம் 11’ ரூ. 55 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி மோசடி?

புதுதில்லி, செப். 29 - இந்திய கிரிக்கெட் அணியின் அதி காரப்பூர்வ ஸ்பான்சரான ‘ட்ரீம் 11’ (Dream 11) எனப்படும் ஆன்லைன் கேமிங் நிறுவனம் ரூ.55 ஆயிரம் கோடி  அளவிற்கு ஜிஎஸ்டி முறைகேடு செய்த தாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் உண்மையான பணத்தைக் கொண்டு ஆடப்படும் கேமிங் பரிவர்த்தனைகளுக்கு 28 சத விகிதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்தது. இந்நிலையிலேயே, ‘ட்ரீம் 11’ நிறுவனம் ரூ.55 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி மோசடி புகாருக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், ‘ட்ரீம் 11’ நிறுவனத்தின் மூல தார நிறுவனமான ‘ட்ரீம் ஸ்போர்ட்ஸ்’, இந்த நோட்டீஸை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. “ட்ரீம் 11 நிறுவனம், பந்தயங் களின், அதாவது பெட்களின் பெயரளவு மதிப்பில் 28 சதவிகித ஜிஎஸ்டி -யை செலுத்தத் தவறியுள்ளது. இது  ஏன்?” என்று விளக்கம் கேட்டு வரி அதி காரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வரி ஏய்ப்பு உண்மை என்று  நிரூபிக்கப்படும் பட்சத்தில், இந்தியா வின் மறைமுக வரி வரலாற்றில் இரண்டாவது பெரிய முறைகேடாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல் படும் கேம்ஸ்கிராப்ட் நிறுவனம் ரூ. 21 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனமும் குற்றச்சாட்டை எதிர்த்து முறையீடு செய்துள்ளது. ஹர்ஷ் ஜெயின் என்பவரைத் தலை வராகக் கொண்ட ‘ட்ரீம் 11’ நிறுவனம், இந்தியாவில் பேண்டஸி கேமிங் துறை யில், அதன் மதிப்பீடு மற்றும் பயனர் களின் எண்ணிக்கை ஆகிய இரண்டி லும் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள நிறுவனமாகும். நேரலையில் ஒரு விளையாட்டு நடந்துகொண்டிருக்க அதிலிருக்கும் வீரர்கள் எப்படிச் செயல்புரிவார்கள் என்பதை முன்பே  கணித்து, கற்பனையாக நாமும் ஒரு அணியை உருவாக்கி ஆடும் விளை யாட்டே பேன்டஸி விளையாட்டு ஆகும். ஆரம்பக் காலகட்டத்தில் இது சூதாட்டம் என்ற புகார் இருந்தது. ஆனால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடுவதே சூதாட்டம். இதில் தனி நபரின் திறனும் ஆராய்ச்சியும் இருப்ப தால் தடை செய்ய முடியாது என்று உச்ச  நீதிமன்றம் தெரிவித்தது. அதன் பின்னர் அசுர வளர்ச்சி அடைந்த ‘ட்ரீம் 11’  நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டிய லிடப்படாமலேயே 1 பில்லியன் டாலர் மதிப்பை எட்டி, இந்தியாவின் முதல் `யுனிகார்ன்’ அந்தஸ்தைப் பெற்ற கேமிங் நிறுவனம் எனும் பெயரை வாங்கியது. அதன் பயனர்களின் இன் றைய எண்ணிக்கை 20 கோடி. தளத்தின் மதிப்பு ரூ. 65 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். இந்த நிறுவனத்துக்கான விளம் பரத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் நடித்துள்ளனர். இந்திய கிரிக் கெட் அணிக்கான முதன்மை விளம்பர தாரர் உரிமத்தையும், 2027-ஆம் ஆண்டு  வரை, ‘ட்ரீம் 11’ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில்தான், ஜிஎஸ்டி இண்டெலிஜென்ஸ் தலைமை இயக்கு நரகம் ‘ட்ரீம் 11’ நிறுவனம் ரூ.55 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பப் பட்டு உள்ளது.