ஆஷஸ் தொடரில் வழக்கம் போல இனவெறி தொடங்கும் அபாயம்
பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரின் 73-வது சீசன் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் பொழுது இங்கிலாந்து வீரர் ராபின்சன் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் காவஜாவை ஆபாசமாக திட்டியுள்ளார். ராபின்சன் திட்டியதை காவஜா கண்டுகொள்ளவில்லை. முக்கியமாக இந்த விவகாரம் வெளியில் கசியவில்லை. போட்டி முடிந்த பின்பு ராபின்சன் திட்டியதை காவஜா ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அலெக்ஸ் கேரி இந்த விவகாரத்தை தற்பொழுது வெளியே கசிய விட ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் இங்கி லாந்து வீரர் ராபின்சனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களின் கண்ட னத்திற்கு இங்கிலாந்து ரசிகர்களும், ராபின்சனின் செயல் பாட்டிற்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் என இரு நாட்டு ரசிகர்க ளும் இனவெறி கருத்துகளுடன் சமூக வலைத்தளங்களில் மோதி வருகின்றனர். இதனால் வழக்கம் போல ஆஷஸ் தொடரில் இனவெறி சண்டை தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராபின்சன்?
இங்கிலாந்து நாட்டின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் சளைக்காமல் ஒரே நாளில் 40 ஓவர்கள் கூட வீசும் திறன் உடையவர். மிதவேகப்பந்துவீச்சாளர் என்றாலும், பவுன்சரில் மிரட்டுவார். எதிரணியின் ரன் குவிப்பை அபாரமாக கட்டுப் படுத்துவார். களத்தில் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். சீண்டினால் கடுமையான மோதல் போக்கை தொடங்குவார். இல்லையெனில் பதிலடி கொடுக்க விக்கெட் வியூகம் வகுத்து பதிலடி கொடுப்பார்.
ரியல் மாட்ரிட் அணிக்கு தாவுகிறார் மாப்பே?
கால்பந்து உலகின் முக்கிய நட்சத்திர வீரரும், பிரான்ஸ் நாட்டின் கேப்டனுமான கிலியான் மாப்பே பிரான்ஸ் நாட்டு கிளப் கால்பந்து அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணி யுடனான ஒப்பந்தம் 2024 வரை உள்ள நிலையில், அடுத்த ஒப்பந் தத்திற்கு ஜூலை 31-க்குள் கையெழுத்திட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக மாப்பே எவ்வித கருத்தும் தெரிவிக்கா மல் இருக்கிறார். இதுபோக ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்கு மாப்பே இடம் பெயர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கால்பந்து உலகின் முன்னணி நட் சத்திரம் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறி அமெரிக்க கிளப் அணியில் இணைந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து பிஎஸ்ஜி அணி மீண்டு வருவதற்குள் மாப்பே அடுத்த அதிர்ச்சி எனும் கோலடித்து பிஎஸ்ஜி அணியின் நிம்மதியை சின்னாபின்னமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை தகுதி
சுற்று ஆட்டங்கள் (கிரிக்கெட்)
இலங்கை - அயர்லாந்து
இடம் : குயின்ஸ் கிளப், புலவயோ
ஸ்காட்லாந்து - ஓமன்
இடம் : அதெல்ட் கிளப், புலவயோ
டிஎன்பிஎல் 2023
இன்றைய ஆட்டங்கள்
திண்டுக்கல் - கோயம்புத்தூர்
நேரம் : மதியம் 3:15 மணி
திருப்பூர் - திருச்சி
நேரம் : இரவு 7:15 மணி
இரண்டு ஆட்டங்களும் மதியம் 12:30 மணிக்கு....
இரண்டு ஆட்டங்களும் எஸ்சிஎப் மைதானம், சேலம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்