games

img

பயம் அறியாத இளங்கன்று ...

ஒரு காலத்தில் இந்திய கால்பந்து அணி, ஃபிபா தரவரிசை பட்டியலில் 173ஆவது இடத்தில் இருந்தது. சுனில் சேத்ரி வரு கைக்குப் பிறகு  97ஆவது இடத்திற்கு முன்னேறியது. இது சாதாரண முன்னேற்றம் அல்ல. இதில் அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் பங்கு போற்றப்பட வேண்டியதாகும். அவரது முதல் சர்வதேச ஆட்டம் கம்போடியா அணிக்கு எதிரானது. அன்றைக்கு வயது 20. பயமறியாத சுனில் சேத்ரி என்கிற இளம் கன்று துள்ளி குதித்து விளையாடி  உலக அணிகளை மிரள வைத்தது. இளமைப் பருவம்... நேபாள கால்பந்து பெண்கள் அணியின் இரட்டை சகோதரிகளில் ஒரு வரான சுசீலா, இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பொறியாளர், ராணுவ கால்பந்து அணிக்காக விளையாடிய கே.பி.சேத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் தம்பதியின் மூத்த மகன்தான் சுனில் சேத்ரி.   19 ஆண்டுகளாக  இந்திய கால்பந்து அணியை கட்டிக் காத்து வந்த சேத்ரி, குழந்தை பருவத்தின் பெரும் பகுதியை மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியின் மிக முக்கிய நகரமும் கிழக்கு இமயமலையில் சுமார் 6,710 அடி உயரத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங் மலைப்பிரதேசத்தில் கழித்தவர். கால் பந்தின் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. படிப்பை தொடர்ந்து கொண்டே கால்பந்து பயிற்சிக்கும் சென்றார். தாய் புலி எட்டடி பாய்ந்தது என்றால் அதன் குட்டி 16 அடி பாய்ந்தது.

 மெஸ்ஸி வரிசையில்... மூன்று வெவ்வேறு கண்டங்களி லும் கால்பந்து விளையாடிய முதல் இந்திய வீரரும்,  கேல் ரத்னா விருதை பெற்ற முதல் கால்பந்து வீரரும் இவரே. அவரது சேவையை பாராட்டி,  மிக உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்ம ஸ்ரீ விருது களும் வழங்கப்பட்டன. அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வழங்கும் ‘சிறந்த வீரர்’ விருதை ஒன்றல்ல இரண் டல்ல ஏழு முறை வென்றி ருக்கும் ஒரே இந்திய வீரர் சுனில். இவரது வருகைக்குப் பிறகே, தெற்காசிய கால்பந்து தொட ரில் 2011, 2015, 2021, 2023 ஆகிய நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தெற்காசிய உறுப்பு நாடுகளுக்கான சர்வதேச கால்பந்து  கோப்பையையும் வென்றுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடிய ஒரே இந்திய வீரர் வீரரான இவரை கொத்திக் கொள்ள கோவா, டெல்லி, பெங்களூரு கிளப் அணிகள் போட்டி போட்ட போதிலும், இந்திய அணியை உலக அளவில் பலம் பொருந்திய அணியாக கொண்டு செல்ல வேண்டும்; உலகக் கோப்பை, ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களை ஒரு முறையாவது வென்று கொடுக்க வேண்டும் என்று போராடிய சேத்ரி, சீன தைபே அணி க்கு எதிராக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உலக சாதனை யும் படைத்தார்.  மிக முக்கியமான இந்த ஆட்டத்தை 2000க்கும் குறைவான ரசிகர்கள் மட்டுமே மைதானத்தில் பார்த்தனர்.  இதனால் மனம் நொந்து போன சேத்ரி, “கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாங்கள் உங்களது நேரத்தை பயனளிக்கும் விதமாக முடிந்தவற்றை செய்கிறோம். இந்திய கால்பந்து அணி மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டுகிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சனம் செய்யுங்கள், உற்சாகப்படுத்துங்கள். ஆனால், இந்திய கால்பந்து அணிக்கு ரசிகர்கள் நீங்கள் தேவை” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வீடியோ வைரலானது. கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், விராட் கோலி, ஹாலிவுட் திரைப்படம் கலைஞர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரக ஆதரவு தெரிவித்தனர். அதன் பிறகு நடந்த தெற்காசிய கால்பந்து போட்டியில் குவைத் அணியை வீழ்த்தி இந்திய அணி 9 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.  கால்பந்து உலக வரலாற்றில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டினோ ரொனால்டோ 206 போட்டிகளில் 128 கோல்களும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி 180 ஆட்டங்களில் 106 கோல்களும் அடித்துள்ளனர். அந்த வரி சையில் இடம் பிடித்திருக்கும் சுனில் சேத்ரி, 150 போட்டிகளில் 94 கோல்கள் அடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் சேத்ரி  ஜூன் 6 ஆம் தேதி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் குவைத் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதை உருக்கமாக அறி வித்திருக்கிறார். இதன் மூலம் 19 ஆண்டு கால அவரது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இந்திய கால்பந்து சகாப்தத்தின் கலை ஓய்வதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

;