games

விளையாட்டு செய்திகள் ஐபிஎல் 2024

பிளே ஆப் சுற்று இறுதிக்கு முன்னேறுவது யார்?

கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று லீக் ஆட்டங்கள்  நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

இந்நிலையில், பிளே ஆப் சுற்றின் முதல்கட்டமான “குவாலிபையர் 1” ஆட்டம் திங்களன்று நடைபெறுகிறது. “குவாலிபையர் 1” ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முத லிரண்டு இடங்களை பிடித்த கொல்கத்தா - ஹைதரா பாத் அணிகள் மோதும் நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறும். தோல்வி காணும் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் (ராஜஸ்தான் - பெங்களூரு) வெற்றி பெறும் அணியோடு “குவாலிபையர் 2” ஆட்டத்தில் மோதும். “குவாலிபையர் 2”  ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி “குவாலிபையர் 1”  ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியோடு இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும். இவ்வளவு சிக்கலான சுற்றுப்பாதை இருப்பதால் “குவாலிபையர் 1” ஆட்டத்திலேயே வெற்றி பெற்று நேரடியாக இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் கொல்கத்தா - ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால், “குவாலிபையர் 1” ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

பாராட்டு மழைக்கு இடையே குவியும் கண்டனம்
பெங்களூரு அணியின் செயலால் வெடித்தது சர்ச்சை

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் மிக மோசமான அளவில் சறுக்கி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூரு அணி, கடுமையான போராட்டத்துக்கு பின் 6 ஆட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றும், நடப்பு சாம்பியன் சென்னை அணியை வீழ்த்தியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இது போராட்ட குணத்துக்கு கிடைத்த வெற்றி என்பதால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் உலகமே பெங்களூரு அணிக்கு பாராட்டுகள் கலந்த வாழ்த்துக் களை இன்று வரை தெரிவித்து வரும் நிலையில், பாராட்டு மழைக்கு ஈடாக பெங்களூரு அணி ஒரே ஒரு சம்ப வத்திற்காக வலுவான கண்டனங் களையும் பெற்று வருகிறது. 

அந்த சம்பவம் என்னவென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில் பெங்களூரு அணி வீரர்கள், தனது சொந்த மண்ணில் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பெங் களூரு மண்ணில் கடைசி ஆட்டத் திற்கு பிரியாவிடை கொடுக்கும் முனைப்பிலும் மைதான ரோடு ஷோ மேற்கொண்டனர். ஆனால் விதிமுறைப் படி எதிரணியான சென்னை அணி வீரர்களிடம் கைகொடுக்கும் சம்பவத்தை புறக்கணித்து, ரோடு ஷோ மேற்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு வீரர்கள் வருவார்கள் அவர்களை வாழ்த்திவிட்டுச் செல்லலாம் என சென்னை அணியின் மூத்த வீரர் தோனி உள்ளிட்டோர் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் வர தாமதமானதால் அணி குழுவினரிடம் கைகுலுக்கிவிட்டு சென்னை வீரர்கள் நடப்பு சீசனில் இருந்து விடைபெற்றனர்.

தோனி ஓய்வு பெற்றால் பெங்களூரு அணிக்கு சிக்கல் உருவாகும்

இந்தியாவிற்காக மூன்று உலகக்கோப்பைகளை பெற்றுத் தந்த முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் மூத்த  வீரர் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். காரணம் நடப்பு சீசனிலேயே கேப்டன் பொறுப்பை  ரிதுராஜ் கெய்க்வாட்டிற்கு விட்டுக் கொடுத்ததால், அவர் எந்த நேரமும் ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் இறுதி ஆட்டம் முடிந்தவுடன் ஓய்வு தொடர்பாக ஏதாவது அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டு வருகிறது. அவ்வாறு நடப்பு ஐபிஎல் சீசனிலேயே தோனி ஓய்வை அறிவித்தால் அது பெங்களூரு அணிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். காரணம் கடைசி போட்டியில் தோனியை அவமதித்து விட்டார்கள் என்ற அவமரியாதை பெங்களூரு வீரர்கள் சந்திக்க நேரிடும். தற்போதே பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை ரசிகர்கள், சர்வதேச அளவிலான முன்னாள் வீரர்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருவதால் தோனி ஓய்வு அறிவித்தால், பெங்களூரு அணியின் நிலைமை படுமோசமாகும்.

“குவாலிபையர் 1” ஆட்டம்

கொல்கத்தா - ஹைதராபாத்
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)
மழை : லேசான வாய்ப்புள்ளது (40%)

;